Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Australian assets on sale? / SALE! அரசு சொத்துக்கள் விற்பனைக்கு? ஏன்?
16/02/2014அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பதன் மூலம் வரவு செலவிலிருக்கும் பற்றாக்குறையை நீக்க முனைகிறது அரசு. மாநில அரசுகளுக்குச் சொந்தமான சொத்துக்களில், எந்தெந்த சொத்துக்களை எப்படி விற்பது என்று கடந்த வருடம் கருவூலக்காப்பாளர் ஜோ ஹொக்கி அடையாளம் காட்டியுள்ளார். அது தவிர, நாட்டின்
-
Do we need an independent investigation into allegations of war crimes in Sri Lanka? / சிறீலங்காவில் போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீன, சர்வதேச விசாரணை தேவையா?
07/02/2014தனது நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்கும் மற்றைய உலக நாடுகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீன, சர்வதேச விசாரணை தேவையில்லாதது என்றும் சொல்கிறார், ஆஸ்திரேலியாவிற்கான சிறீலங்கா தூதுவர். அப்படி ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறீலங்காவிற்கு
-
You can be robbed of your wealth you acquire, not the knowledge / உங்கள் பணம், பொருள், பதவி பறிக்கப்படலாம்…. அறிவைப் பறிக்க யாராலும் முடியுமா?
29/01/20142014ம் ஆண்டு ஆஸ்திரேலிய தினத்தன்று பட்டமளித்து கௌரவிக்கப்படுபவர்களில் தமிழர் ஒருவரும் இருக்கிறார் என்பது தமிழராகி எம் எல்லோருக்கும் பெருமைதான். அதிலும் இவர் கல்விக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்பதில் இரட்டை மகிழ்ச்சி. இன்று OAM விருது வாங்கி தமிழரெல்லோருக்கும் பெருமை சேர்க்கும் குமாரசாமி
-
Bio Pen Surgery / பேனாவின் வலிமை எழுத்தில் மட்டுமல்ல… எலும்பிலும்!
26/01/2014எதிர்வரும் காலத்தில், உங்கள் கால் கை போன்ற உறுப்புகளின் எலும்புகளில் சத்திரசிகிச்சை செய்வதற்கு, 3-D printers மற்றும் கடற்பாசிகள் உதவப் போகின்றன. சத்திரசிகிச்சையின் போது, ஒரு கையடக்கமான கருவி, அது மட்டுமல்ல, நோயாளி குணமாகும் வேகத்தையும் இந்த தொழில்நுட்பங்கள் அதிகரிக்கப்போகின்றன. SBS
-
Seventy-year old woman jumps from the sky for a cause / வலுவளர்க்க வானிலிருந்து குதித்தார் எழுபது வயது பெண்மணி
24/01/2014கனடாவில் இயங்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அமைப்பு ஒன்றைச் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் செயற்திட்டங்களுக்காக நிதி சேகரிக்கவும் வானிலிருந்து குதித்திருக்கிறார் எழுபது வயதுப் பெண்மணி, லோகி மரியதாசன். இவர் சிறு வயதிலேயே போலியோ என்ற இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டாலும், அதை எதிர்த்துப்
-
Hindi speaking Indian MP says, “Tamil deserves national status” / “தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழி” – தருண் விஜய்
22/01/2014“தாயகம் கடந்த தமிழ்” என்ற மூன்று நாள் மாநாடு நேற்று முன்தினம் கோயம்புத்தூரில் ஆரம்பித்த போது “தமிழ் மொழி பேசுபவர்கள் தம் மொழி வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்கிறார்களில்லை” என்ற குற்றச்சாட்டை சென்னை உச்சநீதி மன்ற நீதிபதி வீ ராமசுப்ரமணியம் முன்வைத்திருக்கிறார். ஆனால்
-
Pongalo Hongaro / பொங்கலோ ஹொங்காரோ
15/01/2014தமிழர் திருநாளாம் தைப் பொங்கலுக்கும், ஜப்பானியர்கள் கொண்டாடி வந்த கொஷோ(g)கட்சு [koshō gatsu] என்ற ஜப்பானிய விவசாயிகளின் கொண்டாட்டத்திற்குமிடையில் அதீத ஒற்றுமை இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். விவசாயமும் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்துக்குள்ளாகியிருப்பதாலும், அபிவிருத்தி என்ற பெயரில் நகர்ப்புறம் நோக்கி மக்கள் குடியேறுவதாலும்,
-
First time in Malaysia – Nursery Rhymes in Tamil / முதல் முறையாக மலேசியாவில் சிறுவர் பாடல்கள் இறுவெட்டு
13/01/2014நாம் வளரும் போது, சிறுவர் பாடல்கள் பாடியிருக்கிறோம். அதில் எத்தனை தமிழில் இருந்தன? ஒரு மலேசிய இளம் இசைக்குழு அதையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு அழகான சிறுவர் பாடல்கள் அடங்கிய இறுவெட்டை அண்மையில் வெளியிட்டுள்ளது.இந்த இறுவெட்டின் தயாரிப்பின் மூலகர்த்தா காயத்திரி
-
Asylum policy secrecy leaves more unanswered questions / கேள்விகள் பல, அரசின் மௌனமே பதில்
10/01/2014எல்லைப்பாதுகாப்பு குறித்தும், புகலிடக் கோரிக்கையாளரைக் கையாளும் முறை குறித்தும் ஆஸ்திரேலிய அரசின் கொள்கைகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து விமரிசனத்துக்குள்ளாகியிருக்கிறது. புகலிடம் கோரி வந்த இரு படகுகள் ஆஸ்திரேலிய கடற்படையினரால் கட்டி இழுக்கப்பட்டு இந்தோனேஸியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக வரும் அறிக்கைகள், இது பற்றி இந்தோனேஸியா
-
Cancer preventing Diet …. non white grains / “இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு”
03/01/2014டாக்டர் தவரட்ணம் வசந்தனுடைய ஆராய்ச்சி, மாப்பொருள் பற்றியும் பல்வேறுவகைப்பட்ட தானியங்களின் உபயோகம் பற்றியதுமாகும். கனடாவிலுள்ள அல்பேட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், மாப்பொருள், நார்ச்சத்து மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். மேலும் இரசாயன பகுப்பாய்வு, புதிய உற்பத்தி
-
Australian Heat Wave / உச்சம் தொடும் உஷ்ணம்
03/01/2014வரலாற்றில் என்றுமில்லாதளவு வெப்பமான காலநிலையை ஆஸ்திரேலியா எதிர்கொண்டுள்ளது. உள்நாட்டுப் பகுதிகளில் சராசரி வெப்பநிலை நாற்பது பாகை செல்ஸியசை விட அதிகரித்திருத்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்த வெப்பநிலை குறையும் என்று வாநிலை அறிக்கைகள் குறிப்பிட்டாலும் நியூசவுத் வேல்ஸ் மற்றும் குவீன்ஸ்லாந்து மாநிலங்களில்
-
If I had the power to change anything……… / எதையும் மாற்றும் சகல வல்லமையும் எனக்குக் கிட்டியிருந்தால்….
01/01/20142013ம் ஆண்டு நேற்றோடு முடிந்து விட்டது. “எதையும் மாற்றும் சகல வல்லமையும் உங்களுக்குக் கிட்டியிருந்தால், கடந்த வருடத்தில் எதை மாற்றியிருப்பீர்கள்” என்றும், “இன்று பிறந்திருக்கும் புதிய ஆண்டான 2014ல் எதை எதிர்பார்க்கிறீர்கள்” என்றும் இரண்டு கேள்விகளை, ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் சிலர்
-
2013 – A progressive year for Indigenous Australians / இந்த வருடம் பூர்வீக மக்களுக்கு நன்றாக அமைந்துள்ளது !
22/12/2013ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் அனைவரும் மெதுவாக அழிந்து போய், காலக்கிரமத்தில் முற்றாக ஒழிந்துவிடுவார்கள் என்று 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நம்பப்பட்டது. ஆனால், மற்றைய சமூகங்களை விட ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் அதிக வேகத்தில் வளர்ந்து வருகறார்கள் என்று நவம்பர் மாதம் வெளியாகிய
-
Nothing to beat Konnakol claims contemporary A Cappella artist / “தாங்கு தரிகிட தோம்” – அவுஸ்ரேலிய பெண்மணி லீஸா
20/12/2013கர்நாடக கச்சேரி மேடைகளில் தனிக் கலைஞரால் இசைக்கப்பட்டு வந்த கொன்னக்கோல் (வாயால் சொற்கட்டுகளை இசைக்கும் முறை), தற்காலத்தில் இன்னொரு தாளவாத்திய இசைக்கலைஞரால் இசைக்கப்படும் கருவிகளில் இன்னுமொன்று என்று ஆகிவிட்ட நிலையில், அதன் அருமையைப் புரிந்த மேற்கத்திய இசைக்கலைஞர்கள் பலர் அதனை இப்பொழுது
-
“Kangaroos and Emus don’t walk backwards….. but the Australian Government Does” / ஓரின சேர்க்கையாளருக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
13/12/2013Australian Capital Territory அங்கீகரித்த ஒருபாலியல் திருமணங்களை, ஆஸ்திரேலிய உயர் நீதிமன்று ஏகமனதாக நிராகரித்துள்ளது. A-C-T அறிமுகப்படுத்திய, ஒருபாலியல் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டம், ஆஸ்திரேலிய திருமணச் சட்டத்திற்கு முரணாக இருப்பதால், இரண்டும் ஒரே வேளையில் செயலில் இருக்க முடியாது என்று உயர்
-
“They can beat me, torture me, and even kill me. Then they will have my dead body, but not my obediance.” – MK Gandhi / என்னை அடித்து சித்திரவதை செய்யலாம்….என்னைப் பிணமாக்கலாம்…. அதனால் என்னைப் பணிய வைக்க முடியாது.
09/12/2013சித்திரவதைக்கும் உணர்வதிர்ச்சிக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள், பாதுகாப்பான ஒரு இடத்தைச் சென்றடைவது, அவர்களைப் பாதுகாப்பதின் முதல் படி மட்டுமே. போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த நினைவுகளிலிருந்தும் பயங்கர எண்ணங்களிலிருந்தும் விடுபட்டு அவர்கள் நினைவுகளைச் சமாளிக்கக் கற்றுக் கொள்வது வேறு விஷயம். STARTTS சித்திரவதை மற்றும் உணர்வதிர்ச்சிக்கு
-
I am not a Tamil… not an Australian….. I am a Global Citizen / நான் தமிழனுமல்ல… ஆஸ்திரேலியனுமல்ல….. உலகக்குடிமகன்
08/12/2013தமிழ் இனத்தவரான கமால் அவர்களின் இயற்பெயர், கந்தையா கமலேஸ்வரன். இவர் மலேசிய நாட்டில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வாழும் பிரசித்தி பெற்ற பாடகர். இவரை நேர்கண்டு உரையாடுகிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இரு பகுதிகளாக ஒலிபரப்பப்படும் இந்த நேர்காணலின் நிறைவுப்
-
Mandela is a great soul / மண்டேலா ஒரு மாமனிதர்
06/12/2013இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் தலைவர் என்று பார்க்கப்படும் நெல்சன் மண்டேலா அவர்களது மறைவு குறித்து, தென்னாபிரிக்காவில் பிறந்து, வாழும் தமிழர், தமிழ் ஆர்வலர் மற்றும் சமூக சேவையாளர், திரு சின்னப்பன் அவர்கள் நெல்சன் மண்டேலா குறித்த தென்னாபிரிக்க தமிழர் பார்வையைத்தருகிறார். இவரை
-
A great leader mentors other leaders / மண்டேலா வளர்த்துவிட்ட நாடு, இனி வீழாது!
06/12/2013தென்னாபிரிக்காவில் பலவருடங்கள் வாழ்ந்தவரும், தற்பொழுது சிட்னி நகரில் வசிப்பவருமான வைத்தியர் சிற்றம்பலம் ராகவன் அவர்கள், மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலா பற்றிய தனது பார்வையை, எமது நிகழ்ச்சித்தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயனுடன் பரிமாறுகிறார். Dr Sittampalam Ragavan a long time resident
-
Big Brother is Watching / ஆளில்லா விமானம் – ஆபத்தானதா? ஆறுதல் தருவதா?
01/12/2013மனித இனத்தின் தொலைதூரப் பார்வையை அதிகரிக்க வான்பரப்பில் ஒரு புதிய இயந்திரம்…. Drone என்று அழைக்கப்படும் ஆளில்லா விமானம், இப்பொழுது ஆஸ்திரேலியர்களிடையே பிரபலமடைந்து வருகிறது. வீழ்ச்சியடைந்துவரும் அதன் விலை ஒரு காரணம். கண்டுபிடித்துக் காப்பாற்றும் செயற்பாட்டில் ஆளில்லா விமானத்தின் உபயோகம் அதிகரித்துவருகிறது.