Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Are you an FBA (Foreign born Australian) or an FDA (Fair Dinkum Australian) / மகாராணியை மகிழ்வித்த தமிழர்… ஆஸ்திரேலியாவில்
29/11/2013தமிழ் இனத்தவரான கமால் அவர்களின் இயற்பெயர், கந்தையா கமலேஸ்வரன். இவர் மலேசிய நாட்டில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வாழும் பிரசித்தி பெற்ற பாடகர். இவரை நேர்கண்டு உரையாடுகிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந் நேர்காணலின் நிறைவுப்பாகம் அடுத்த வெள்ளி இரவு
-
“If two neighbors want to fight, they will find a quarrel in a straw.” – Irish Proverb / உழவுக்குத் தான் வந்தனை….. உளவுக்கல்ல!!
29/11/2013சீனக்கடற்பரப்பின் வானில் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் பற்றி வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் சொன்ன கருத்துகளுக்குச் சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 2006ம் ஆண்டு, வளங்களைப் பகிர்வது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆஸ்திரேலியா, கிழக்குத் தீமோர் தலைவர்களை உளவுபார்த்தது என்ற
-
Maps changed the World – Will they change Perceptions? / உலகை மாற்றியது வரைபடங்கள்…. அவை மனதை மாற்ற உதவுமா?
27/11/2013வரைபடங்கள் பல நூற்றாண்டுகளாக உலகை மாற்றியிருக்கின்றன. நிலங்களைப் போராடி வெல்லவும், புதிய கண்டங்களில் குடியேறவும் வரைபடங்கள் வழி வகுத்திருக்கின்றன. வன்பொருள், மென்பொருள், பகுப்பாய்வு, மற்றும் புவியியல் குறிப்பிடப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து, இலகுவில் புரியக்கூடியவகையில் வடிவமைத்துத் தருவது புவியியல் தகவல் முறைமை (GIS)
-
Do men really want a special day? / சர்வதேச ஆண்கள் தினம் அவசியம்தானா ??
25/11/2013ஆண்களுக்கும் மதிப்புக் கொடுத்து அவர்களுக்குத் தனித்துவமான விடயங்களுக்கான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் ஒரு நாள், சர்வதேச ஆண்கள் தினம். இது குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய நண்பர்களாக ஒரு
-
Bree opens doors to Hidden Kitchens in Sri Lanka / இலங்கைத் தீவின் இரகசிய சுவைகளைப் பகிரங்கமாக்குகிறார் Bree
24/11/2013சிட்னி வாழ் எழுத்தாளரும் புகைப்படக்கலைஞருமான Bree Hutchins, குற்றவியல் வழக்குரைஞராகப் பயிற்றப்பட்டவர். 2010ம் ஆண்டு தன் வழக்குரைஞர் வேலையிலிருந்து விலகி, தன் இதயத்தைத் தொட்ட உணவு மற்றும் பயணம் பற்றி எழுதும் எழுத்தாளராக மாறியிருக்கிறார். Bree Hutchins எழுதிய Hidden Kitchens
-
How long can you bury one’s head in the sand? / பூனை கண்ணை மூடினால்…..
24/11/2013ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் இந்தோனேஸியாவை மோப்பம் பார்த்தது என்ற குற்றச்சாட்டுக் குறித்து, ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்பும் அமெரிக்காவின் ஜோன் கெர்ரியும் அமைதி காக்கிறார்கள். அரசுகளுக்கிடையேயான இருதரப்பு விவகாரங்களைப் பற்றிக் கலந்தாலோசிக்கும் ஆஸ்மின் எனப்படும் கூட்டம் அண்மையில் வாஷிங்டனில் கூடியிருந்த போது,
-
Can you really do away with heart surgery? / சத்திரசிகிச்சை இல்லாமல் இதயத்தைச் சீர்பண்ண முடியுமா?
22/11/2013புற்று நோய்க்கலன்கள், குருதிக் குழாய்களைத் தமது தேவைக்காக வளர்த்துக் கொள்கின்றன. இந்த செயற்பாட்டை அவதானித்த இஸ்ரேலிய மருத்துவ ஆராய்ச்சியாளர் Dr Britta Hardy அவர்கள், இது எப்படிச் செயல் படுகிறது என்பதை ஆரய்ந்து 12 அமினோ அமிலங்களைக் கொண்ட புரதப் பொருள்
-
Take pride in a Tamil’s Discovery / புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறார் தமிழர் ஒருவர் !!
20/11/2013வான்வெளியையும் வெல்வதற்கு மனித இனம் வழி சமைத்திருந்தாலும் புற்றுநோயை இன்னமும் வெல்லவில்லை. புற்றுநோயைக் குணமாக்கும் வழியை இன்னமும் கண்டுபிடிக்கவில்லையென்றாலும், மருந்துகளால் அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு புதிய அணுகுமுறையால், புற்று நோயைக் குணமாக்கும் வகையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றிகண்டு, தமிழர்கள்
-
Don’t have a Plan B … Keep on trying till you reach your goal !! / சாகும் வரை நான் பாடுவேன். இசை தான் என் வாழ்க்கை.
18/11/2013கடந்த வியாழக்கிழமை வெளியான, Pizza II வில்லா என்ற திரைப்படத்தில் ஒரு பாடலைப்பாடியிருக்கிறார், சிட்னியில் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் தீக்ஷிதா வெங்கடேஷ். டீ என்ற பெயர் ஏன், இசை மேல் அவருக்கு இருக்கின்ற பிரியம், அவரது அடுத்த முயற்சி என்று பல
-
CHOGM – An Australian Perspective / ஊடகவியலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட சர்வதேச மாநாடு
17/11/2013பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இன்று கொழும்பில் நிறைவுக்கு வருகிறது. இந்த மாநாட்டில் பங்கு கொள்ள ஆஸ்திரேலிய ஊடகக் குழுவுடன் கொழும்பு சென்ற எமது SBS ஊடகத்தின் Karen Middleton கொழும்பிலிருந்து எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் அலசுகிறார். Commonwealth
-
All it takes is 2 Hours a Day / தமிழ் விக்கிப்பீடியாவை வளர்க்க நீங்களும் எழுத வாருங்களேன்!
17/11/2013தமிழ் விக்கிபீடியாவில் 2,500க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கும் கனக சிறீதரன், ஒரு அமைதியான அடக்கமான, தன்னைப்பற்றி அதிகம் பேசவிரும்பாத ஒரு சாதனையாளர். சிலமாதங்களுக்கு முன் எம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர், ரைசல் அவர்கள், தமிழ்நாட்டில் சேலம் அருகே கிராமமொன்றில் பள்ளிக்கூட ஆசிரியையாகப் பணியாற்றும்
-
Law Breaker – A senior Sri Lankan naval officer arrested ! / “சிறீலங்கா கடற்படை அதிகாரி கைது” – வேலியே பயிரை மேய்கிறதா?
17/11/2013ஆஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தும் வேலையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, இலங்கைக் கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையில் 17 வருடங்கள் சேவையாற்றிய இந்தக் கடற்படை அதிகாரி அதிகலாபமீட்டும் தொழிலாக இதைச் செய்து வந்தது மட்டுமின்றி, ஆஸ்திரேலிய அரசுக்கு ஆட்கடத்தல் பற்றி அறிவுரை
-
“I couldn’t have done it without her support” / பேய் உலாவும் நேரத்தில் எழுதும் எனக்குத் துணை என் மனைவி
15/11/2013விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால், தமிழ் இலக்கிய செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும் இலக்கிய விருது, விழ்ணுபுரம் விருது. பொதுவாக கௌரவிக்கப்படாத, மூத்த படைப்பாளிகளை கௌரவிப்பதே, 2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விருதின் நோக்கம். ஐம்பதாயிரம் இந்திய ரூபாய்களையும் நினைவுப் பரிசுக கேடதம் ஒன்றையும் உள்ளடக்கியது
-
Do You Know Ragulan (Logi Revendran) / யாழ்ப்பாணத்தில் பிறந்த இராகுலன் அல்லது லோகி, இரவீந்திரனை உங்களுக்குத் தெரியுமா?
15/11/2013 Duration: 49sசெஞ்சிலுவைச் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல் உள்நாட்டுப்போர், ஆயுதப்பேராட்டம், மற்றும் இயற்கை அனர்த்தங்களால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் சேவையை செஞ்சிலுவைச் சங்கம் செய்துவருவதை நீங்கள் அறிவீர்கள். இந்த வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 1991ம் ஆண்டு பிறந்த இராகுலன் அல்லது லோகி,
-
“I am yet to see any real action …..” / இந்த அழுத்தம் எத்தகைய வடிவம் பெறும்….புரியவில்லையே?
13/11/2013Commonwealth மாநாடு என்று பரவலாக அறியப்பட்ட, பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாதது குறித்து, சென்னைப்பல்கலைக்கழகத்தில் அரசியல் துறை பேராசிரியராகக் கடமையாற்றும் மணிவண்ணனுடன் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன் அலசுகிறார். Our producer
-
First CHOGM without the Queen / மகாராணி இல்லாத முதல் மாநாடு
13/11/2013Commonwealth மாநாடு என்று பரவலாக அறியப்பட்ட, பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் தலைவர்கள் நாளை மறுதினம், வெள்ளிக்கிழமை மீண்டும் சந்திக்க இருக்கிறார்கள். ஆஸ்திரேலியப் பிரதமர் ரோனி அப்பொட், முதல் தடவையாக இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். இலங்கையில் 2009ம் ஆண்டு முடிவுக்ககுக்
-
Happy to be home where I enjoy my rights / “சுதந்திரத்தைச் சுவாசிக்கிறேன்” – இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்ட செனட்டர் லீ ரீயனன்.
11/11/2013உண்மையைக் கண்டறியும் பணியில் இலங்கைத் தீவிற்குச் சென்றிருந்த செனட்டர் லீ ரீயனனும், நியூசீலாந்து நாடாளுமன்ற உறுப்பினர், ஜான் லோகி அவர்களும் இலங்கையின் வட மாநிலத்திற்குச் சென்று திரும்பிவிட்டு, கொழும்பில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி அதில் பேசுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்னால்
-
Tax Changes – Are they good or bad / அரசு மாறினால் வரியும் மாறும்! அது நல்லதா? இல்லையா?
11/11/2013Superannuation எனப்படும் ஓய்வூதியம், Fringe Benefits எனப்படும் சலுகைகள் எனப்பலவற்றிற்கும் மேலாக Labor கட்சி பிரேரித்திருந்த வரி மாற்றங்கள் பலவற்றைத் தாம் ரத்து செய்யப்பேவதாக, கருவூலக்காப்பாளர் Joe Hockey அறிவித்துள்ளார். இது பற்றி, SBS செய்திப்பிரிவின், Amanda Cavill தயாரித்த விவரணத்தைத்
-
Monument to Commemorate Tamil history and valour / தமிழர் வரலாற்றின் நினைவு முற்றம், முள்ளிவாய்க்கால் முற்றம்
08/11/2013தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் நேரடிக் கண்காணிப்பில் நூற்றுக்கணக்கான சிற்பிகள், பல ஓவியர்களின் கூட்டு உழைப்பில் உருவான முற்றத்தின் சிற்பங்களின் பிரமாண்டம் பிரமிப்பூட்டும் அதே சமயம், மனதின் ஈரத்தைக் கசியவைக்கும் தமிழர் வரலாற்றின் நினைவு முற்றம், முள்ளிவாய்க்கால் முற்றம். முற்றத்தின்
-
Australia is acting against God’s will / கடவுளின் போதனைக்கு எதிராகச் செயல்படுகிறது ஆஸ்திரேலியா
06/11/2013புகலிடம் கோரி வருவோரை ஆஸ்திரேலியா நடத்தும் விதம், தமது மதக் கொள்கைகளக்கு விரோதமானது என்று பல்வேறு மதத்தவர்களும் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் புகலிடக் கொள்கை குறித்து, இந்நாட்டின் பிரதான மதங்களின் பிரதிநிதிகள் என்ன சொல்கிறார்கள் என்று கண்டறிந்து, SBS வானொலியின் செய்திப்பிரிவைச்