Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
தமிழ் உட்பட பல ஆசிய மொழிக் கற்றலுக்கு ஆஸ்திரேலிய அரசு கூடுதல் நிதி உதவி
06/05/2026 Duration: 02minஆஸ்திரேலியாவில் ஆசிய மொழிக் கல்வியை வலுப்படுத்த ஏதுவாக தமிழ் உட்பட பல மொழிகளைக் கற்றுக் கொடுப்பதற்கு அரசு நிதியுதவியை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவு - இவர்கள் கூறுவது என்ன?
06/05/2026 Duration: 14minதமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தலில் எதிர்பாராத அமோக வெற்றியை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெற்று அட்சி அமைக்க உள்ளது. தவெகவிற்கு அடுத்தபடியாக திமுகவும் அதன் பின் அதிமுகவும் அதிக இடங்களை வென்றுள்ளன. முதல் முறையாக திராவிட கட்சி இல்லாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் அமைய போவதாகவும் கருதப்படுகிறது. தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து நமது நேயர்கள் சிலர் பகிர்ந்துக்கொண்ட கருத்துகளை அடுத்ததாக கேட்போம். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி இன்பசேகரன்.
-
தமிழ் சுயாதீன இசைக்கு புதிய அடையாளம் தரும் Keys & Verses கௌஷிக் மற்றும் விஜய்!
06/05/2026 Duration: 29minமெல்பனைத் தளமாகக் கொண்ட சுயாதீன இசைக் கலைஞர்கள் கௌஷிக் கணேசன் மற்றும் விஜய் ராகவன் ஆகியோர் Keys & Verses Collective என்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார்கள். 'தமிழா தமிழா' மற்றும் 'AI சந்தரி' உட்பட பல பிரபலமான பாடல்களை வெளியிட்டுள்ள இக்கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு. மெல்பன் கலையகத்தில் அவர்களை சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவில் குடிவரவு முகவர்கள் பலர் மீது கடும் நடவடிக்கை
06/05/2026 Duration: 06minஆஸ்திரேலியாவில் குடிவரவு ஆலோசனை வழங்குபவர்கள் மீது கண்காணிப்பு அதிகரித்துள்ள நிலையில் குடிவரவு முகவர்கள் பதிவு ஆணையத்தின் அலுவலகமான OMARA கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 06 மே 2026, புதன்கிழமை
06/05/2026 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 06/05/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: அதிகரிக்கும் யானை - மனித மோதல்களும், உயிரழப்புகளும்
06/05/2026 Duration: 08minஇலங்கையின் கிழக்கு பகுதியில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைக்கும் – மனிதனுக்கும் இடையே மோதல்கள் காரணமாக உயிரிழப்புகளும் சேதங்களும் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
தமிழகத்தில் புதிய அரசு அமைக்க கூட்டணி உருவாகிறது!
05/05/2026 Duration: 08minதமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிக மிக பரப்பரப்பான சூழலுக்கிடையில் நடந்து முடிந்த நிலையில், தவெக ஆட்சி அமைவதற்கான சாத்தியம் பற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026: பிந்திய தகவல்கள்
05/05/2026 Duration: 09minதமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கி, சந்தித்த முதல் தேர்த்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மாபெரும் சாதனையை படைத்துள்ளார் விஜய். விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக வீசிய அலை தமிழக அரசியலை புரட்டி போட்டு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். இதுகுறித்த செய்தியோடு இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
-
ஆஸ்திரேலிய மாணவர் விசா பரிசீலனை கடுமை – இந்தியா, இலங்கை மாணவர்கள் பாதிப்பு!
05/05/2026 Duration: 03minஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மறுப்பு வீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 05 மே 2026 - செவ்வாய்க்கிழமை
05/05/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 05/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
-
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்: தவெக அமோக வெற்றி
04/05/2026 Duration: 05minதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகிறது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 113 தொகுதிகளில் (இந்திய நேரம் மதியம் 01:40 நிலவரப்படி) முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி 64 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 58 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால் தமிழக வெற்றிக் கழகம் மேலும் சில இடங்களில் முன்னிலை வகித்து தனித்து ஆட்சி அமைக்கும் என்று கருதப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
Tips to reduce petrol costs | Fuel in Focus - பெட்ரோல் செலவைக் குறைத்து பணத்தைச் சேமிப்பது எப்படி?
04/05/2026 Duration: 07minRising fuel prices are putting pressure on household budgets across Australia, and for many people, it’s changing the way they travel. So what can you do to reduce your fuel costs without giving up your daily routine? Here are some simple, practical ways to save money on petrol. - உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள குடும்பங்களின் நிதிநிலைமையில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன—மேலும் பலருக்கு, இது அவர்கள் பயணம் செய்யும் விதத்தையும் மாற்றுகிறது. அப்படியானால் உங்கள் வழக்கமான வாழ்க்கையை மாற்றாமல் எரிபொருள் செலவை எப்படி குறைக்கலாம்? இது தொடர்பில் Sahil Makkar ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி : Alice Springs சிறுமியின் மரணமும், தொடர்ந்த வன்முறையும் - நடந்தது என்ன?
04/05/2026 Duration: 07minAlice Springs-இல் கடந்த வாரம் ஐந்து வயது பூர்வீகக்குடியின சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக அங்கு வன்முறைகள் இடம்பெற்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
‘AI தொழில்நுட்பம் குடியேற்றவாசிகள், பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும்’
04/05/2026 Duration: 15minநக்சத்திரா சுரேஷ் அவர்கள் இணையம் தொடர்பான குற்றவியல் ஆய்வு நிபுணர் (cyber criminologist), மட்டுமல்ல, அவர் ஒரு தொழில்முனைவோர், கல்வியாளர் மற்றும் சர்வதேச பேச்சாளர். Privacy, cybersecurity, online harms, technology-facilitated violence மற்றும் AI உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்டுவரும் ஆபத்துகள் குறித்து, சமூக அறிவியல் பார்வையில் ஆய்ந்து வருகிறார். Nakshathra அவர்களுடன் SBS தமிழ் நிகழ்ச்சிக்காக உரையாடுகிறார் சுக்ருதி நாராயணன்.
-
இன்றைய செய்திகள்: 04 மே 2026 - திங்கட்கிழமை
04/05/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 04/05/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (26 ஏப்ரல் – 2 மே 2026)
02/05/2026 Duration: 05minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (26 ஏப்ரல் – 2 மே 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
ஆஸ்திரேலியாவிலிருந்து 15 இந்தியர்கள் நாடுகடத்தல்
01/05/2026 Duration: 02minஆஸ்திரேலியாவிலிருந்து 15 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வருகிறார் பத்மஶ்ரீ வேலு ஆசான்
01/05/2026 Duration: 09minதமிழ்க் கலை பற்றும் பண்பாட்டுக் கழகம் 14ஆவது ஆண்டாக நடத்துகின்ற ‘சிட்னியில் சித்திரை திருவிழா’ நிகழ்வில் பங்கேற்க இந்தியாவிலிருந்து வருகை தருகிறார் பறையிசைக் கலைஞர் பத்மஶ்ரீ வேலு ஆசான். அவருடைய கலைப் பயணம் மற்றும் சித்திரை திருவிழா குறித்து அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலிய குடியேற்றத்தில் மாற்றம் - இந்தியா முதலிடம்
01/05/2026 Duration: 06minஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தின் புதிய மாற்றங்கள் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தை முந்தி இந்தியா முக்கிய குடியேற்ற நாடாக முன்னிலை பெற்றுள்ளது. இந்த மாற்றம், நாட்டின் பல்சமூக அடையாளத்தையும் எதிர்கால வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. இதுபற்றிய செய்தியின் பின்ணணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 01 மே 2026 - வெள்ளிக்கிழமை
01/05/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 01/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.