Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
ஆஸ்திரேலிய மாணவர் விசா பரிசீலனை கடுமை – இந்தியா, இலங்கை மாணவர்கள் பாதிப்பு!
05/05/2026 Duration: 03minஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மறுப்பு வீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 05 மே 2026 - செவ்வாய்க்கிழமை
05/05/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 05/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
-
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்: தவெக அமோக வெற்றி
04/05/2026 Duration: 05minதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகிறது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 113 தொகுதிகளில் (இந்திய நேரம் மதியம் 01:40 நிலவரப்படி) முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி 64 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 58 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால் தமிழக வெற்றிக் கழகம் மேலும் சில இடங்களில் முன்னிலை வகித்து தனித்து ஆட்சி அமைக்கும் என்று கருதப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
Tips to reduce petrol costs | Fuel in Focus - பெட்ரோல் செலவைக் குறைத்து பணத்தைச் சேமிப்பது எப்படி?
04/05/2026 Duration: 07minRising fuel prices are putting pressure on household budgets across Australia, and for many people, it’s changing the way they travel. So what can you do to reduce your fuel costs without giving up your daily routine? Here are some simple, practical ways to save money on petrol. - உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள குடும்பங்களின் நிதிநிலைமையில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன—மேலும் பலருக்கு, இது அவர்கள் பயணம் செய்யும் விதத்தையும் மாற்றுகிறது. அப்படியானால் உங்கள் வழக்கமான வாழ்க்கையை மாற்றாமல் எரிபொருள் செலவை எப்படி குறைக்கலாம்? இது தொடர்பில் Sahil Makkar ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி : Alice Springs சிறுமியின் மரணமும், தொடர்ந்த வன்முறையும் - நடந்தது என்ன?
04/05/2026 Duration: 07minAlice Springs-இல் கடந்த வாரம் ஐந்து வயது பூர்வீகக்குடியின சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக அங்கு வன்முறைகள் இடம்பெற்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
‘AI தொழில்நுட்பம் குடியேற்றவாசிகள், பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும்’
04/05/2026 Duration: 15minநக்சத்திரா சுரேஷ் அவர்கள் இணையம் தொடர்பான குற்றவியல் ஆய்வு நிபுணர் (cyber criminologist), மட்டுமல்ல, அவர் ஒரு தொழில்முனைவோர், கல்வியாளர் மற்றும் சர்வதேச பேச்சாளர். Privacy, cybersecurity, online harms, technology-facilitated violence மற்றும் AI உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்டுவரும் ஆபத்துகள் குறித்து, சமூக அறிவியல் பார்வையில் ஆய்ந்து வருகிறார். Nakshathra அவர்களுடன் SBS தமிழ் நிகழ்ச்சிக்காக உரையாடுகிறார் சுக்ருதி நாராயணன்.
-
இன்றைய செய்திகள்: 04 மே 2026 - திங்கட்கிழமை
04/05/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 04/05/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (26 ஏப்ரல் – 2 மே 2026)
02/05/2026 Duration: 05minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (26 ஏப்ரல் – 2 மே 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
ஆஸ்திரேலியாவிலிருந்து 15 இந்தியர்கள் நாடுகடத்தல்
01/05/2026 Duration: 02minஆஸ்திரேலியாவிலிருந்து 15 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வருகிறார் பத்மஶ்ரீ வேலு ஆசான்
01/05/2026 Duration: 09minதமிழ்க் கலை பற்றும் பண்பாட்டுக் கழகம் 14ஆவது ஆண்டாக நடத்துகின்ற ‘சிட்னியில் சித்திரை திருவிழா’ நிகழ்வில் பங்கேற்க இந்தியாவிலிருந்து வருகை தருகிறார் பறையிசைக் கலைஞர் பத்மஶ்ரீ வேலு ஆசான். அவருடைய கலைப் பயணம் மற்றும் சித்திரை திருவிழா குறித்து அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலிய குடியேற்றத்தில் மாற்றம் - இந்தியா முதலிடம்
01/05/2026 Duration: 06minஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தின் புதிய மாற்றங்கள் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தை முந்தி இந்தியா முக்கிய குடியேற்ற நாடாக முன்னிலை பெற்றுள்ளது. இந்த மாற்றம், நாட்டின் பல்சமூக அடையாளத்தையும் எதிர்கால வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. இதுபற்றிய செய்தியின் பின்ணணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 01 மே 2026 - வெள்ளிக்கிழமை
01/05/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 01/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
-
சிட்னியில் சித்திரைத் திருவிழா: தமிழரின் கலை, பண்பாட்டுக் கொண்டாட்டம்!
30/04/2026 Duration: 10minதமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் (TACA) நடத்தும் “சிட்னியில் சித்திரை திருவிழா” NSW மாநிலத்தின் சிட்னி பெருநகரின் Stanhope Gardens எனுமிடத்திலுள்ள Blacktown Leisure Centreயில் வைத்து காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. 14வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவின் வளர்ச்சி, இளம் தலைமுறைக்கான முக்கியத்துவம், மற்றும் இந்த ஆண்டு மக்கள் எதிர்பார்க்கக்கூடிய சிறப்பு அம்சங்கள் குறித்து நாம் உரையாடுகிறோம். கலந்துகொண்டவர்கள்: அனகன்பாபு, கர்ணன் மற்றும் பிரமிளா ஆகியோர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.
-
வெளிநாட்டில் பிறந்த ஆஸ்திரேலியர்களில் இந்தியர்கள் முதலிடம்
30/04/2026 Duration: 02minஆஸ்திரேலிய மக்கள்தொகையில் வெளிநாடொன்றில் பிறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
வாழைப் பட்டு நூல் தயாரிக்கும் தமிழர்!
30/04/2026 Duration: 11minவாழைமரத்திலிருந்து பட்டு நூல் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் பல கண்டுபிடிப்புகளை செய்துள்ள தமிழ்நாடு தூத்துக்குடியை சேர்ந்த திரு முருகன் தனது கண்டுபிடிப்பு பற்றியும் அதில் தான் எதிர்க்கொண்ட சவால்ககள் பற்றியும் நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
-
வர்மக்கலையில் என்னென்ன வகைகள் உள்ளன?
30/04/2026 Duration: 06minவர்மக்கலை என்பது தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக இது வளர்த்தெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பில் தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக வர்மக்கலையை கற்பித்துவரும் வர்ம ஆசான் சு.ராஜேந்திரனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி: ஏன் தம்பதியரைவிட தனியாக வாழ்வோர் அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது?
30/04/2026 Duration: 10minநாட்டில் வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்கின்ற இந்த நேரத்தில், ஒரு புதிய ஆய்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஒரு துணையுடன் சேர்ந்து வாழ்பவர்களைவிட, திருமணமாகாமல் தனியாக வாழ்கின்றவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள், மற்றும் தனிப்பெற்றோர் (single parents), சுமார் இருபதாயிரம் டொலர் அளவுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று Finder என்னும் நிதி ஒப்பீட்டு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கரப்பான்பூச்சி பந்தயம் பற்றி தெரியுமா?
30/04/2026 Duration: 08minஆஸ்திரேலியா தினத்தன்று (Australia Day) குயின்ஸ்லாந்தில் நடைபெறும் ஒரு வித்தியாசமான விறுவிறுப்பான கொண்டாட்டமான கரப்பான்பூச்சி பந்தயம் பற்றி “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
இன்றைய செய்திகள்: 30 ஏப்ரல் 2026 - வியாழக்கிழமை
30/04/2026 Duration: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 30/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
Tax Return காலத்தில் ATO எந்த அம்சங்களை கடுமையாக கண்காணிக்கவுள்ளது?
29/04/2026 Duration: 02minஆஸ்திரேலிய வரி அலுவலகம் (ATO), இந்த ஆண்டின் வருமான வரி தாக்கல் காலத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் மீது கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.