Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (28 செப்டம்பர் – 4 அக்டோபர் 2025)
04/10/2025 Duration: 05minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (28 செப்டம்பர் – 4 அக்டோபர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 4 அக்டோபர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது!
03/10/2025 Duration: 02minஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!
03/10/2025 Duration: 02minநீண்ட வார விடுமுறைக் காலத்தையொட்டி ACT மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலைவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
"Almost double the rate of hostility and violence": How ableism impacts people with disability - SBS Examines : மாற்றுத்திறனாளர்கள் மீதான பாகுபாடு அவர்களை எவ்வாறு பாதிக்கிறது?
03/10/2025 Duration: 07minMore than one in five Australians have a disability. But this large, diverse group faces disproportionate levels of discrimination and prejudice. - ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 22% பேர் மாற்றுத்திறனாளர்கள். உண்மையில், ஆஸ்திரேலியர்களில் ஐந்தில் ஒருவர் மாற்றுத்திறனுடன் வாழ்கிறார். ஆனால் அவர்களில் பலரின் அனுபவங்கள் — குறிப்பாக அவர்கள் அடிக்கடி சந்திக்கும் துன்புறுத்தல்கள் — எவருக்கும் தெரியாமல், கேட்கப்படாமலேயே உள்ளன.
-
செய்தியின் பின்னணி: 5% Deposit Scheme விரைவான நுழைவா அல்லது மறைந்துள்ள அபாயமா?
03/10/2025 Duration: 07minநாட்டில் First Home Buyers - முதலாவது வீடு வாங்குபவர்களுக்கான அரசின் புதிய 5% Deposit Scheme - முற்பணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
வாங்கும் சம்பளத்திற்கு குறைவான வரி செலுத்தும் முறைகள் என்ன?
03/10/2025 Duration: 11minஒருவர் அதிக சம்பளம் பெறும்போது வரி செலுத்தும் விகிதம் அதிகரிக்கிறது. ஆனால் வரி குறைவாக செலுத்தும் சில வழிகளையும் அரசு அனுமதிக்கிறது. அப்படி வரியை குறைக்கும் Salary Sacrifice முறை பற்றி விளக்குகிறார் ஆஸ்திரேலியாவில் Chartered Accountant தகுதியுடன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக பணியாற்றும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
இன்றைய செய்திகள்: 03 அக்டோபர் 2025 - வெள்ளிக்கிழமை
03/10/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 03/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
03/10/2025 Duration: 08minமட்டக்களப்பில் சுமார் 35 வருட காலம் படையினர் வசமிருந்த பாடசாலை உள்ளிட்ட நிலப்பகுதி விடுவிப்பு மற்றும் அரச பல்கலைக்கழகங்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
From simplicity to stellar heights: The journey of Dr. V. Narayanan - எளிமையிலிருந்து உச்சம் தொட்ட தமிழர்: ISRO-இந்திய விண்வெளி ஆய்வுமையத் தலைவர் Dr.V.நாராயணன்
02/10/2025 Duration: 10minIndia’s space research organisation has been achieving remarkable milestones that amaze the world. Dr. V. Narayanan serves as the Secretary of the Indian Space Department and the Chairman of the Indian Space Research Organisation (ISRO), which continues to accomplish successive achievements. During his visit to Australia, RaySel meets and speaks with him at the SBS studio. Part – 1. - உலகம் வியந்துபார்க்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது இந்திய விண்வெளி ஆய்வுத்துறை. அடுக்கடுக்கான சாதனைகளைப் படைக்கும் இந்திய விண்வெளித்துறையின் செயலாளராகவும், இந்திய விண்வெளி ஆய்வு மையமான ISRO அமைப்பின் தலைவராகவும் பணியாற்றுகிறார் முனைவர் V. நாராயணன் அவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருக்கும் அவரை SBS ஒலிப்பதிவுகூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். Part 1.
-
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு
02/10/2025 Duration: 08minSBS தமிழின் இன்றைய உலகச் செய்திகளின் பின்னணியில், காசா போர் நிலவரம், அமெரிக்காவின் காசா போர் நிறுத்த திட்டம், கத்தாரிடம் மன்னிப்புக் கேட்ட இஸ்ரேல், முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம், ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடை உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
செய்தியின் பின்னணி: நர்ஸ்களும் நோயாளிகளுக்கு மருந்து சீட்டு எழுத அரசு அனுமதி!
02/10/2025 Duration: 08minஆஸ்திரேலியாவின் சுகாதார வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் செப்டம்பர் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை எழுதப்பட்ட்து. பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் (Registered Nurses), இனி டாக்டர்கள் போன்று நோயாளிகளுக்கு மருந்துகளை எழுதும் அதிகாரத்தை பெற்றார்கள். இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
கிறிஸ்மஸ் தீவு: அகதிகளின் நுழைவாயில் தீவின் உண்மை வரலாறு என்ன?
02/10/2025 Duration: 09minஆஸ்திரேலியாவில் அடைக்கலமாக விரும்புவோருக்கு நுழைவுவாயிலாக விளங்கிய கிறிஸ்மஸ் தீவின் வரலாறு வித்தியாசமானது. ஆஸ்திரேலியாவின் 8,222 தீவுகளுள் கிறிஸ்மஸ் தீவு ஒன்று என்றாலும் தனக்கென்று தனித்த வரலாற்றை கொண்ட இந்த தீவு குறித்த தகவலை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
மொழிபெயர்ப்பாளர்கள் ஏன் நமக்குத் தேவை?
02/10/2025 Duration: 11minசர்வதேச மொழிபெயர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தையொட்டி மொழிபெயர்ப்பாளர்களான அண்ணாமலை மகிழ்நன், ராமலிங்கம் நந்தகுமார் மற்றும் NAATI அமைப்பின் National Operations Manager Michael Nemarich ஆகியோரது கருத்துக்களுடன் சிறப்பு விவரணம் ஒன்றைப் படைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
பர்மாவில் வாழும் தமிழர்கள்!
02/10/2025 Duration: 13minபர்மா தற்பொழுது மியன்மார் என்று அழைக்கப்படும் ஆசிய நாட்டில் தற்போது பத்து லட்சத்திற்கு அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். பர்மாவில் வாழும் தமிழர்களின் தற்போதைய நிலை அவர்கள் கடந்து வந்த பாதை மற்றும் அவர்களின் ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் ஆகியவை குறித்து பர்மாவில் வசிக்கும் அண்ணாதுரை மற்றும் அவரின் சகோதரி மணிமேகலை இருவரும் மனம் விட்டு பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் கொண்டு விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 2 அக்டோபர் 2025 வியாழக்கிழமை
02/10/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 2/10/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
-
வெளிநாட்டு பயணிகளுக்கு டிஜிட்டல் வருகை அட்டையை அறிமுகப்படுத்தியுள்ள இந்தியா!
01/10/2025 Duration: 02minE-Arrival Card - டிஜிட்டல் முறையில் வருகை அட்டைகளை நிரப்பும் வசதியை இந்தியா இன்று முதல் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Superannuation சேமிப்பை நாம் ஏன் கண்காணிக்க வேண்டும்?
01/10/2025 Duration: 14minSuperannuation வைத்திருக்கும் பலர் தங்களின் super கணக்கில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. Super கணக்கு உள்ள ஒவ்வொருவரும் தங்களின் super கணக்கில் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து விரிவாக உரையாடுகிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், ஆஸ்திரேலியாவின் CA CPA, மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக பல பொருளாதார கட்டுரைகளை எழுதியுள்ள கோவிந்தராஜன் அப்பு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
வங்கிகள் தரும் Credit Card/Debit Cardகளை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது?
01/10/2025 Duration: 10minவங்கிகள் தரும் Credit Card மற்றும் Debit Card போன்றவற்றை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது, எமாற்றப்படுவதை தவிர்ப்பது குறித்து விளக்குகிறார் Cyber Risk Senior Manager, Master of Cybersecurity and Forensics எனும் தகுதிகள் கொண்ட C. செந்தில் அவர்கள். அவர் University of Sunshine Coastயில் இணைய பாதுகாப்பு குறித்த கல்வியாளர் ஆவார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
செய்தியின் பின்னணி: காஸாவுக்கான புதிய அமைதித் திட்டத்தில் என்னவெல்லாம் உட்பட்டுள்ளது?
01/10/2025 Duration: 06minகாசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டத்திற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன. அதேநேரம் ஹமாஸ் இத்திட்டத்தை பரிசீலனை செய்து வருவதாகக் கூறுகிறது.இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 01 அக்டோபர் 2025 புதன்கிழமை
01/10/2025 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 01/10/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.