Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
நான்கு கவிதைகள் சொல்லும் நான்கு அர்த்தங்கள்!
01/01/2025 Duration: 09minகவிதை நேரமிது. SBS தமிழ் ஒலிபரப்புக்காக கவிஞர் பழனி பாரதி, கவிஞர் சேரன், கவிஞர் டோரதி, கவிஞர் மு. மேத்தா ஆகியோர் 2010 ஆம் ஆண்டு தங்கள் குரலில் பதிவு செய்த கவிதைகள் மீண்டும் ஒலிக்கின்றன. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
இன்று முதல் ஆஸ்திரேலிய கடவுசீட்டின் கட்டணம் $400க்கு மேல் உயர்வு
31/12/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 01/01/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
41 தடவைகள் ஒரே குற்றத்தை இழைத்த ஓட்டுநருக்கு 27 ஆயிரம் டொலர்கள் அபராதம்
31/12/2024 Duration: 02minதெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர் ஒருவர் வாகனம் ஓட்டும்போது கைபேசியை 41 தடவைகள் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 27,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செல்லப்பிராணியாக முதலை வளர்க்க NT அரசு அனுமதி
31/12/2024 Duration: 02minசெல்லப்பிராணியாக வீட்டில் முதலை வளர்க்கலாம் என்று ஆஸ்திரேலியாவின் Northern Territory பிராந்திய அரசு அனுமதி வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
புத்தாண்டு வரவேற்பு நிகழ்வையொட்டி பாதுகாப்புப் பணியில் பெருமளவு காவல்துறையினர்
31/12/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 31/12/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
குயின்ஸ்லாந்து Clamshell நீர்வீழ்ச்சியில் தமிழர் மரணம் – முழு தகவல்
30/12/2024 Duration: 07minபிரிஸ்பேன் தமிழ் சமூகம் பல ஆண்டுகளாக நன்கு அறிந்தவர் சீனிவாசன் அவர்கள். 55 வயதான சீனிவாசன் அவர்கள் கடந்த ஞாயிறு குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தெற்கு கெய்ன்ஸ் பகுதியின் Clamshell நீர்வீழ்ச்சியில் தவறுதாலாக விழுந்த விபத்தில் மரணமடைந்தார். சீனிவாசனின் மரணம் குறித்த விரிவான தகவலை பகிர்ந்துகொள்கிறார் - பிரிஸ்பேன் தாய் தமிழ் பள்ளியின் தலைவரும், தமிழ் ஒலி வானொலியின் பொறுப்பாளருமான சிவா கைலாசம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
மகளைக் காக்கும் முயற்சியில் தமது உயிரைப் பறிகொடுத்த பெர்த் தம்பதி!
30/12/2024 Duration: 02minதமது மகளை நீரிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் பெர்த் தம்பதியர் உயிரிழந்த சம்பவம் மேற்கு ஆஸ்திரேலியா Walpole அருகே இடம்பெற்றுள்ளது.இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தமிழ்நாடு 2024: ஒரு மீள்பார்வை
30/12/2024 Duration: 10minமுடிவிற்கு வரும் 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த நிகழ்வுகளில் சில. முன்வைக்கிறார் எமது தமிழகச் செய்தியாளர் ராஜ்.
-
ஆஸ்திரேலியா 2024: ஒரு மீள்பார்வை
30/12/2024 Duration: 10minகடந்து செல்லும் 2024ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
2025ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய பொருளாதாரம்: வலுப்பெறுமா? சிக்கலாகுமா?
30/12/2024 Duration: 09minமுடிவுக்கு வரும் 2024ஆம் ஆண்டில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன, வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அது நடக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் எதிர்வரும் நாட்களில் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்று பல்வேறு காரணிகள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் கடினமான காலத்திற்கு நாம் தயாராக வேண்டுமா அல்லது பொருளாதாரம் வளரும் என்ற நம்பிக்கை உள்ளதா?
-
தென் கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி: 7 நாட்கள் துக்கம் அறிவிப்பு!
30/12/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 30/12/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
விளையாட்டு 2024 - ஒரு மீள்பார்வை
29/12/2024 Duration: 07min2024ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விளையாட்டுகள் மற்றும் முடிவுகளில் சிலவற்றின் தொகுப்பு. முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Praba Maheswaran reviews major sporting events and stories that made headlines in 2024.
-
ஆஸ்திரேலிய, உலக நிகழ்வுகளின் இந்த வார தொகுப்பு
27/12/2024 Duration: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (22 – 28 December 2024) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 28 டிசம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
ஆஸ்திரேலியாவின் மலிவான பல்பொருள் அங்காடி எது?
27/12/2024 Duration: 02minஆஸ்திரேலியாவில் வாடிக்கையாளர்களுக்கான மலிவான supermarket- பல்பொருள் அங்காடியாக Aldi தொடர்ந்தும் காணப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நாட்டில் எங்கு விற்கப்பட்ட அதிஷ்டலாபச் சீட்டுகள் பரிசுகளை பெற்றுக் கொடுத்துள்ளன?
27/12/2024 Duration: 03minஇந்த ஆண்டு, ஆஸ்திரேலியா முழுவதும் விற்கப்பட்ட lottery- அதிஷ்டலாபச் சீட்டுகள் 473 division one வெற்றி உட்பட மொத்தம் 1.58 பில்லியனுக்கும் அதிகமான பரிசுத் தொகையைக் கொண்டு வந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
உலகம் 2024: ஒரு மீள்பார்வை
27/12/2024 Duration: 11minகாசாவில் நடந்த போர் இந்த ஆண்டு சர்வதேச தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது; அமெரிக்க அரசியலில் திருப்பங்களும் திகைப்புகளும் நிறைந்த ஆண்டாக 2024 அமைந்துள்ளது.
-
2024 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என்ன?
27/12/2024 Duration: 15minஇந்த ஆண்டு (2024) இலங்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், செய்திகளையும் தொகுத்தளிக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் 92 வயதில் காலமானார்
27/12/2024 Duration: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 27 டிசம்பர் 2024 வெள்ளிக்கிழமை
-
Behind the scenes: Sthapathy R. Selvanthan on the making of the Thiruvalluvar Statue – Part 2 - சுனாமிக்கும் அசராத திருவள்ளுவர் சிலையை 21 அடுக்கு கருங்கற்களில் உருவாக்க பயன்படுத்தப்பட்ட உத்திகள் என்ன?
26/12/2024 Duration: 17minThe silver jubilee celebration of the iconic Thiruvalluvar statue, installed 25 years ago in the sea of Kanyakumari, Tamil Nadu, is set to take place on January 1. Standing at an impressive height of 133 feet and weighing 7,000 tons, the statue is a remarkable testament to architectural and sculptural brilliance. In this context, Sthapathy R. Selvanathan, a distinguished sculptor from Tamil Nadu, highlights the expertise and vision of his uncle, the renowned Padma Bhushan and Kalaimamani awardee Dr. V. Ganapathy Sthapathy, the mastermind behind this monumental masterpiece. Having worked closely under his periyappa (uncle) on this historic project, Sthapathy R. Selvanathan shares valuable insights into the intricate design process, the advanced techniques applied, the innovative methods adopted, and the significant challenges overcome during the creation and installation of the statue. Information and photos provided by Mrs.Ponni Selvanathan; interview produced by RaySel. Interview Part: 2 - தமிழ்நாட்டின் குமர
-
சிலம்பாட்டத்தை சீரழியவிடலாமா?
26/12/2024 Duration: 09min2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்திருந்த சிலம்பாட்டக் கலைஞரும் ஆசிரியருமான திரு சிங்கபாகு சிவக்குமார் அவர்கள், சிலம்பாட்டத்தின் பெருமை குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் கலந்துரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.