Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 63:12:11
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • ஆஸ்திரேலியாவில் அதிவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் வேலைவாய்ப்புகள் எவை?

    07/01/2025 Duration: 02min

    2025ல் நீங்கள் வேலை தேடுகிறீர்களானால், retail வணிகம், தொழில்நுட்பத்துறை மற்றும் பராமரிப்புத்துறை சிறந்ததொரு தொடக்கமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • கனடா பிரதமர் Justin Trudeau பதவி விலகுவதாக அறிவிப்பு!

    06/01/2025 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 07/01/2025) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • “மனதில் மாற்றம் இல்லாமல் உடற்பயிற்சி போல் செய்வது யோகாப்பியாசம் ஆகாது!”

    06/01/2025 Duration: 13min

    நடிகர், பத்திரிகையாளர், எழுத்தாளர், யோகாசன பயிற்றுனர் என்று பன்முகம் கொண்ட, ஏயெம் என்ற புனைபெயர் கொண்ட C அண்ணாமலை அவர்கள் அண்மையில் ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை, அவரை SBS ஒலிபரப்புக் கூடத்தில் குலசேகரம் சஞ்சயன் சந்தித்து உரையாடிய நேர்காணல்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    06/01/2025 Duration: 08min

    இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடக கணக்குகள் தொடங்க பெற்றோர்களின் ஒப்புதல் தேவை என்று வரைவு விதிகளை வெளியிட்ட இந்திய அரசு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார விவகாரம் தமிழக அரசியலில் ஏற்படுத்தும் அதிர்வலைகள் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்!

  • குயின்ஸ்லாந்தில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்ததாகக் கூறப்படுபவர் NSWஇல் கைது

    06/01/2025 Duration: 08min

    குயின்ஸ்லாந்து மாநிலத்தின் சன்ஷைன் கோஸ்ட் என்ற இடத்தில் 1997ஆம் ஆண்டு மீகன் ரோஸ் (Meaghan Rose) என்ற பெண்ணைக் கொலை செய்ததாகக் கூறப்படும் கீத் லீஸ் (Keith Lees) என்பவர் NSW மாநிலத்தில், சிட்னி நகரின் வடமேற்கு பகுதியில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

  • மெல்பனிலிருந்து புறப்பட்ட Etihad விமானம் அவசரமாக நிறுத்தம்: பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

    06/01/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 06/01/2025) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலிய, உலக நிகழ்வுகளின் இந்த வார தொகுப்பு

    04/01/2025 Duration: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (29 டிசம்பர் – 4 ஜனவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 4 ஜனவரி 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • நேரம் தவறாமைக்கு பெயர் போன விமான சேவை எது தெரியுமா?

    03/01/2025 Duration: 02min

    உலகிலுள்ள எந்தெந்த விமான நிறுவனங்கள் நேரந்தவறாமல் உரிய இடத்தை சென்றடைகின்றன என்ற புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • From Handouts to Hands-On: Transforming a Dependent Society into a Self-Reliant Community - கையேந்தும் சமூகத்தை கைகொடுக்கும் சமூகமாக மாற்றும் முயற்சியில் முரளீதரன்

    03/01/2025 Duration: 12min

    In the remote regions of Sri Lanka, hunger and malnutrition present significant challenges for students, hindering their ability to attend school consistently, concentrate on their studies, and acquire essential life skills. Without proper nutrition, their potential for a brighter future remains constrained. - இலங்கையின் பல பகுதிகளில், பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை மாணவர்களுக்குக் குறிப்பிடத்தக்க சவால்களாக உள்ளன. தொடர்ந்து பாடசாலைக்குச் செல்வதற்கும், படிப்பில் கவனம் செலுத்துவதற்கும் மற்றும் அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களைப் பெறுவதற்கும் தடையாக அமைகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாமல், பிரகாசமான எதிர்காலத்திற்கான அவர்களின் திறன் தடை செய்யப்பட்டுள்ளது.

  • இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் காசாவில் 54 பேரைக் கொன்றுள்ளது

    02/01/2025 Duration: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 03 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    02/01/2025 Duration: 08min

    இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலான பேச்சுகள், இலங்கை தமிழரசுக் கட்சியில் காணப்படும் தலைமைத்துவப் பிரச்சினை ஆகிய செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • பணத்தின் பயன்பாடு இன்னும் நீண்ட காலம் நிலைத்திருக்குமா?

    02/01/2025 Duration: 07min

    நாட்டில் சில வணிகங்கள் Cash payment - பணத்தை ஏற்கும் விதத் ல் கட்டாயப்படுத்த லேபர் அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Earlier this year, the federal government flagged it plans to require businesses to accept cash as payment for essentials. But as cash use continues to decline, its role in the flow of money is becoming more niche. Here's what to know about where cash use currently stands in Australia.

  • விசா நிராகரிப்புக்கெதிரான மேன்முறையீடு: அரசுக்கு புதிய சிக்கல்!

    02/01/2025 Duration: 02min

    ஆஸ்திரேலியாவில் தமது விசா நிராகரிப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 5 மாதங்களில் இரண்டு மடங்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துபவர்களைப் பிடிக்க AI கமராக்கள்!

    02/01/2025 Duration: 02min

    வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசி பயன்படுத்தும் ஓட்டுனர்களை பிடிப்பதற்கான AI தொழிநுட்பத்துடனான கமராக்கள், மேற்கு ஆஸ்திரேலியாவில் பாவனைக்கு வருகிறது.இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இனவெறி பரவுகிறது

    02/01/2025 Duration: 06min

    ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழக வளாகங்களில் பரவலாக இனவெறி காணப்படுவதாக ஆஸ்திரேலிய Human Rights Commission - மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Tom Stayner. SBS – தமிழுக்காக தயாரித்தவர்: றைசெல்.

  • புகழ்பெற்ற விருது பெறுவதால், தமிழருக்குப் புகழ்

    02/01/2025 Duration: 12min

    மென் பொருளாளர் பழனி குமணன், பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான, 'Pulitzer' (புலிட்சர்) விருதை, 2019ஆம் ஆண்டு பகிர்ந்துகொண்டார்.

  • அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட வாகனதாக்குதலில் 15 பேர் பலி

    02/01/2025 Duration: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 2 ஜனவரி 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • 179 பேரை பலிகொண்ட தென்கொரிய விமான விபத்து: காரணம் என்ன?

    01/01/2025 Duration: 09min

    தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜேஜூ ஏர் விமானம் அவசர தரையிறக்கத்தின்போது ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 179 பேர் பலியாகினர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும்நிலையில் ஓடுபாதையின் எல்லையில் இருந்த சுவர் குறித்து விமான நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்விபத்து பற்றிய செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவில் ஜனவரி 1 முதல் வந்துள்ள மாற்றங்கள் என்ன?

    01/01/2025 Duration: 06min

    ஆஸ்திரேலியாவில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அந்த மாற்றங்களில் முக்கியமானவற்றை தொகுத்தளிக்கிறார் றைசெல்.

  • 2024: இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என்ன?

    01/01/2025 Duration: 08min

    இந்தியா கடந்த 2024ம் ஆண்டில் அரசியல் முதல் காலநிலை வரை எதிர்கொண்ட மிக முக்கிய நிகழ்வுகள் பற்றிய ஒரு மீள் பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

page 1 from 25