Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
Indu Balachandran: A Tamil woman achieving victory in her maiden Election - இந்து பாலச்சந்திரன்: அரசியலில் குதித்த உடனேயே தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்ப்பெண்
18/10/2024 Duration: 10minIn the recent local government elections in New South Wales, 17 Tamil candidates participated. Among them, Indu Balachandran, an independent candidate in the Ku-ring-gai constituency’s Gordon Ward, celebrated a remarkable victory in her first election. - அண்மையில் NSW மாநிலத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 17 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதில், Ku-ring-gai தொகுதி Gordon Ward பகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட இந்து பாலச்சந்திரன் அரசியலில் இப்போதுதான் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
18/10/2024 Duration: 08minநாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் வேட்பாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். தொடரும் யானை மனித மோதல்களினால் இரு தரப்பிலும் தொடரும் உயிரிழப்புகள் இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
நவீன மன்னர் நாட்டுக்கு வருகிறார் !!
18/10/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 18/10/2024) செய்தி.
-
குயின்ஸ்லாந்து தேர்தல் களம்: கொள்கைகளும், பின்னணியும்
17/10/2024 Duration: 10minகுயின்ஸ்லாந்து மாநிலத் தேர்தல் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நான்காவது முறையாக லேபர் கட்சி வெற்றிபெற Premier Steven Miles முயற்சிக்கிறார். Liberal National Party வெற்றிபெறும் என்று கட்சியின் தலைவர் David Crisafulli என்று சூளுரைக்கிறார். குயின்ஸ்லாந்து மாநிலத் தேர்தல் கள நிலவரத்தை அலசுகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலியின் கிஷோர் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
Tamils and Tamizhakam in Chinese eyes - சீனர்களின் பார்வையில் தமிழரும் தமிழகமும்
17/10/2024 Duration: 15minThe Chinese and Tamil communities have celebrated thousands of years of friendship. And this rich bilateral exchange has been recorded by several monks and traders. - சீன மற்றும் தமிழ் சமூகங்கள், இரண்டாயிரம் வருடங்களாக நட்பைக் கொண்டாடியுள்ளன என்றும், இரு தரப்பினரிடையே நிகழ்ந்த பரிமாற்றம் குறித்து பல துறவிகள் மற்றும் வர்த்தகர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று, பெய்ஜிங் வெளியுறவு பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையைச் சேர்ந்த ஜோ சின் ஆராய்ந்து அறிந்துள்ளார்.
-
இந்தியாவில் உள்ள சொத்தை விற்று பணத்தை இங்கு கொண்டுவருவது எப்படி?
17/10/2024 Duration: 12minபுலம்பெயர்ந்து இங்கு வசித்து வருபவர்கள் இந்தியாவின் உள்ள தங்களின் சொத்துக்களை விற்று வரும் பணத்தை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வருவதில் உள்ள நடைமுறை பற்றி தமிழ்நாட்டில் ஆடிட்டராக பணியாற்றி வரும் Chartered Accountant பிரதீப் செந்தில்குமார் அவர்களுடன் உரையாடுகிறார் செல்வி.
-
நாடு முழுவதும் சுமார் 6000 ATM இயந்திரங்கள் மூடப்பட்டுள்ளன
16/10/2024 Duration: 04minசெய்திகள்: 17 அக்டோபர் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்
-
நிச்சயமற்ற விசா நிலைக்கு நிரத்தர தீர்வு - தொடரும் அகதிகளின் போராட்டம்!
16/10/2024 Duration: 06minபுகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு நிச்சயமற்ற விசா நிலையில் உள்ள சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரத்தர தீர்வு வேண்டி சுமார் 70 நாட்களுக்கு மேலாக உள்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு முன்னர் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து SBS News-இற்காக Sara Tomevska ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
அடுத்தவாரம் முதல் வைத்தியர்கள் ஆஸ்திரேலியா வருவதற்கான விரைவு விசா
16/10/2024 Duration: 09minதேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வைத்தியர்கள் ஆஸ்திரேலியாவில் வந்து பணியாற்றுவதற்கு விரைவாக விசா வழங்க அரசினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இது நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. ஆனால் இது ஒரு ஆபத்தான முன்னெடுப்பு என Royal Australian College of General Practitioners அமைப்பு எச்சரித்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் சிட்னியில் வசித்துவரும் சமூகசேவையாளர் கார்த்திகேயன் ராமநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
வருங்கால மனைவிக்காக 4.3 மில்லியன் டொலர்களுக்கு ஆடம்பர வீட்டை வாங்கியுள்ள பிரதமர்
16/10/2024 Duration: 02minஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese தனது வருங்கால மனைவியுடன் வாழ்வதற்காக நியூ சவுத் வேல்ஸின் Central Coastஇல் 4.3 மில்லியன் டொலர்களுக்கு புதிய ஆடம்பர வீடொன்றை கொள்வனவு செய்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
குடிவரவு தடுப்புக்காவல் தொடர்பில் மற்றுமொரு சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் அரசு
16/10/2024 Duration: 09minகுடிவரவு தடுப்புக்காவல் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு மற்றுமொரு புதிய சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கிறது. இந்த செய்தியின் பின்னணியை அகதிகள் நல செயற்பாட்டாளர் சாரதா ராமநாதன் அவர்களின் கருத்துக்களுடன் எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
இந்திய பேசு பொருள்: பேராசிரியர் G N சாய்பாபா மறைவு
16/10/2024 Duration: 10minடெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா உயிரிழப்பு மற்றும் தமிழகத்தில் நடந்து வந்த சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் ஆகியவை குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலியாவில் பெண்கள் ஏன் platelets தானம் செய்ய முடியாது?
16/10/2024 Duration: 10minஆஸ்திரேலியாவில் எப்போதும் இல்லாத அளவு இப்போது இரத்த வங்கிகளில் Platelets கையிருப்பில் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. அதற்கான காரணம் என்ன மேலும் இரத்த தானம் செய்வது பற்றிய பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் Royal North Shore மருத்துவமனையில் Haematologist-ஆக பணியாற்றும் டாக்டர் பூமகள் குமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
T20 உலகக்கோப்பை: இந்தியாவை வென்று அரையிறுதியில் ஆஸ்திரேலியா
15/10/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 16/10/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
ஓட்டுநரின் வருமானத்திற்கு ஏற்ப சாலை விதிமீறல் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என பரிந்துரை!
15/10/2024 Duration: 02minஆஸ்திரேலியாவின் தற்போதைய போக்குவரத்து அபராத முறை, வருமானம் குறைந்தவர்களை மேலும் பாதிக்கிறது எனவும், ஓட்டுநரின் வருமானத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் புதிய அறிக்கை ஒன்று பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Debit & credit card கூடுதல் கட்டணங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் மற்றுமொரு நடவடிக்கை
15/10/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 15/10/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
“இராவணன் பொம்மை எரிப்பது ஏற்புடையதல்ல”
14/10/2024 Duration: 14minபிரிஸ்பன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது இராவணன் பொம்மை எரிக்கப்படும் என்று அதன் ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்திருப்பது தமக்கு ஏற்புடையதல்ல என்று பல தமிழ் அமைப்புகள் குரல் கொடுக்கின்றன.
-
“கனவு மெய்ப்பட்டது” : 2024 அமைதிக்கான நோபல் பரிசை அணுசக்தி எதிர்ப்புக்குழு வென்றது
14/10/2024 Duration: 08minஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீதான அமெரிக்க அணுக் குண்டு தாக்குதலிலிருந்து உயிர் தப்பியவர்களின் அடிமட்ட இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பிற்கு இந்த ஆண்டிற்கான, Nobel Peace Prize - அமைதிக்கான நோபல் பரிசு, வழங்கப்பட்டுள்ளது.
-
இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
14/10/2024 Duration: 09min2 மணிநேரம் உலகையே திரும்பி பார்க்க வைத்த திருச்சி விமானம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் நடைபெற்ற கவரப்பேட்டை ரயில் விபத்து ஏற்படுத்தும் சர்ச்சைகள் மற்றும் நடிகர் விஜய்யின் கட்சியை விமர்சிக்கும் பாஜக போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
Voice தொடர்பான கருத்து வாக்கெடுப்பை ஆஸ்திரேலியா நிராகரித்து இன்றுடன் ஓராண்டு நிறைவு!
14/10/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 14/10/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.