Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 61:30:50
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • பல லட்சம் மக்களுக்கு கட்டணத்தை திரும்பத் தரும் நான்கு பெரிய வங்கிகள்!

    18/07/2024 Duration: 07min

    நாட்டில் இயங்கும் நான்கு மிகப் பெரிய வங்கிகளும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் தவிர்த்திருக்கக்கூடிய கட்டணங்களை வசூலித்துள்ளன. சிக்கலான செயல்முறைகளை வங்கிகள் நடைமுறைப்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் நிதி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று Australian Securities and Investment Commission அறிக்கை கண்டறிந்துள்ளது. இந்த நான்கு வங்கிகளும் அப்படி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை திருப்பிச் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Phoebe Deas & Ciara Hain. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.

  • The yearning never stops - புத்தம் புது "பூமி"?!

    18/07/2024 Duration: 11min

    Scientists using NASA's planet-hunting Kepler telescope have found a planet beyond the solar system that is a close match to Earth. Last week. New Horizon sent detailed images from Pluto. - மனிதன் பூமியிலிருந்து சென்று குடியேறலாம் அல்லது மனிதர் போன்ற உயிரினங்கள் அங்கு வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் புதிய கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இது பூமியிலிருந்து 1,400 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதற்கு Kepler 452b என்று பெயரிட்டுள்ளனர்.

  • நாட்டின் உபரி நிதி எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் – Treasurer

    18/07/2024 Duration: 04min

    செய்திகள்: 18 ஜூலை 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • ஏமாற்ற வருகிறார்கள்; எப்படி நாம் ஏமாறாமல் இருப்பது?

    17/07/2024 Duration: 10min

    ஒருமுறை ஒருவர் ஏமாந்துவிட்டார் என்றால் அவரை குறிவைத்து இழந்த பணத்தை மீட்டுத் தருகிறோம் என்று மீண்டும் அவரை ஏமாற்றும் financial recovery scam நாட்டில் அதிகரித்து வருகிறது. எப்படி நாம் ஏமாறாமல் இருப்பது என்று விளக்குகிறார் - Cyber Risk Senior Manager, Master of Cybersecurity and Forensics எனும் தகுதிகள் கொண்டவர் C. செந்தில் அவர்கள். அவர் University of Sunshine Coastயில் இணைய பாதுகாப்பு குறித்த கல்வியாளர் ஆவார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • Planning medical treatment abroad? Key considerations to keep in mind - சிகிச்சைக்காக வெளிநாடு செல்கின்றீர்களா? எதில் கவனம் தேவை?

    17/07/2024 Duration: 12min

    The number of Australians traveling overseas for medical treatment is increasing annually. R. Sathyanathan, a seasoned professional in the media industry, elaborates on the types of treatments sought abroad and the potential issues that may arise from this trend. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடுகளில் சிகிச்சைபெற செல்கின்றவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. என்னென்ன சிகிச்சைகளுக்காக மக்கள் இங்கிருந்து வெளிநாடு செல்கின்றனர், அதில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன என்று விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • 'கச்சத்தீவு தேவை இல்லை, தீர்வு தான் வேண்டும்'

    17/07/2024 Duration: 12min

    கச்சதீவு தொடர்பாக தமிழக மீனவர்களின் கோரிக்கை பற்றியும், மீனவர்கள் எதிர்கொண்டுள்ள எல்லைச் சிக்கல் பற்றியும் தமிழ்நாட்டில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜேசுராஜ் அவர்களுடன் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன் நடத்தும் உரையாடல்.

  • பாடகி மதுஸ்ரீ: மிகச் சாதுவான “சண்டைக் கோழி” இவர்

    17/07/2024 Duration: 10min

    மெல்பன் மற்றும் சிட்னி நகரங்களில் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் “அப்படிப் போடு" என்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா வரவிருக்கும் திரைப்பட மற்றும் சங்கீத பாடகர் மதுஸ்ரீ அவர்களின் தாய் மொழி வங்காள மொழி. இருந்தாலும் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மற்றும் தமிழ் போன்ற இந்திய மொழித் திரைப்படங்கள் பலவற்றில் பாடியுள்ளார்.

  • ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளது, வெளிநாட்டுப் பயணங்களில் என்ன தாக்கம்?

    17/07/2024 Duration: 07min

    கடந்த ஆறு மாதங்களில் ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளது இதனால், தங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை செலவழிக்க வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  • மாணவர் விசாவில் உள்ள கட்டுப்பாடுகள் புகலிட விண்ணப்பங்களை அதிகரிக்குமா?

    17/07/2024 Duration: 02min

    மாணவர் வீசாவில் வருபவர்கள் பாதுகாப்பு வேண்டி விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை ஆறு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • விக்டோரியாவில் வெள்ளம் தொடர்பிலான எச்சரிக்கைகள்

    16/07/2024 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை17/07/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • ஜூலை முதல் Employer-sponsored தற்காலிக விசா விதிமுறையில் அறிமுகமாகியுள்ள மாற்றங்கள்

    16/07/2024 Duration: 02min

    மாணவர் விசாக்களில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், employer-sponsored temporary visas தொழில் வழங்குநர்கள் sponsor செய்யும் தற்காலிக விசா விதிமுறைகளில் மாற்றங்கள் வந்துள்ளன. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயன்றவர் யார்? இதுவரை வெளியான தகவல்

    16/07/2024 Duration: 02min

    முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயன்ற 20 வயது நபர் குறித்து இதுவரை வெளியான தகவல். தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • சீனாவுக்கு ஒரே மாதத்தில் $140 மில்லியன் டாலர் ஆஸ்திரேலிய ஒயின் ஏற்றுமதி!

    15/07/2024 Duration: 03min

    செய்திகள்: 16 ஜூலை 2024 செவ்வாய்க்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • தமிழகம் தந்த ஈடு இணையற்ற அரசியல் ஆளுமை!

    15/07/2024 Duration: 03min

    எளிமையின் சின்னமாக, அரசியல் சக்தியாக, படிக்காத மேதையாக திகழ்ந்தவர் காமராஜ் அவர்கள். அவரின் 121 ஆவது பிறந்த தினம் இன்று (15 ஜூலை) கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த “காலத்துளி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

  • கடந்து சென்ற நாட்களில் தமிழ்நாட்டில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி

    15/07/2024 Duration: 09min

    தமிழ்நாட்டில் கடந்து சென்ற சில நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி.

  • பகலொளி சேமிப்பு நேரம்: “பயனில்லை” என்கிறார்கள் விவசாயிகள்

    15/07/2024 Duration: 09min

    நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, ACT, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் டஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் பகலொளி சேமிப்பு நேர மாற்றம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவது வழக்கம். பெரும்பாலும், இது நீண்ட வார விடுமுறையுடன் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறுவதுண்டு. ஆனால், இதனை இரண்டு மாதங்கள் தாமதப் படுத்த வேண்டுமென்று NSW மாநில விவசாயிகள் கோரிக்கை முன்வைக்கிறார்கள்.

  • கொலை முயற்சி: அமெரிக்க அதிபர் தேர்தலில் Donald Trump வெற்றிக்கு வழி வகுக்குமா?

    15/07/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 15/07/2024) செய்தி.

  • சிட்னியில் தமிழர்களுக்கான கலாச்சார மண்டபம் - வாக்களிப்பில் வெற்றி

    14/07/2024 Duration: 05min

    சிட்னியில் கலாச்சார மண்டபம் ஒன்றினைக் கட்டுவதற்குரிய சைவமன்றத்தின் பாரிய முன்னெடுப்புக்கு அதிகளவான அங்கத்தவர்கள் ஆதரவாக இன்று வாக்களித்து அனுமதியளித்துள்ளார்கள். இந்த வெற்றி குறித்தும், புதிய கலாச்சார மண்டபம் தொடர்பிலான மன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் சைவமன்றத்தின் உபதலைவர் கணபதிப்பிள்ளை ஜெகநாதன் அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொண்டார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    12/07/2024 Duration: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 13 ஜூலை 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

  • What is road rage and how to deal with it? - “சாலை சீற்றம்” (Road Rage) அதை எப்படி சமாளிப்பது?

    12/07/2024 Duration: 09min

    Aggressive driving is a continuum of bad driving behaviours which increase crash risk and can escalate to road rage. People who engage in road rage may be liable for traffic offences in Australia, have their car insurance impacted and most importantly put their lives and those of others at risk. Learn about the expectations around safe, responsible driving and what to do when you or a loved one are involved in a road rage incident. - ஆள் மனதில் இருக்கும் முரட்டுத்தனம் பெரும்பாலும் சாலையில் வாகனம் ஓட்டும்போது ஒருவருக்கு மிகைப்படுத்தப்பட்டு வெளியே சீற்றமாக வெளிப் படுத்தப்படலாம். ஆவேசத்துடன் வாகனம் ஓட்டுவதற்கான அறிகுறிகளை உங்களால் அடையாளம் காண முடியுமா? சாலையில் தகராறு ஏற்பட்டால் எப்படி சிறப்பாக சமாளிப்பது என்று தெரியுமா? அல்லது அது உங்கள் வாகன காப்பீட்டை அது எவ்வாறு பாதிக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா? ஆஸ்திரேலியாவை அறிவோம் தொடரில், இந் நாட்டில், பாதுகாப்பாக மற்றும் பொறுப்பாக வாகனம் ஓட்டுவதற்கான தரநிலைகள் மற்றும் நீங்கள் அல்லது உங்கள் அன்புக்குரியவர் “சாலை சீற்றத்தை எதிர்கொண்டால்” என்ன நடவடிக்கைகள் எடுக்க வ

page 16 from 25