Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 61:30:50
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • நினைத்தது பத்தாயிரம், கிடைத்தது மில்லியன் டாலர்!

    23/07/2024 Duration: 02min

    NSW பெண்மணி தனது $1 மில்லியன் லோட்டோ வெற்றியை $1000 என்று தவறாகக் எண்ணிய போது உண்மை தெரிந்த சமயம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • நிரந்தர விசா கோரி உள்துறை அமைச்சரின் அலுவலகம் முன்பு போராட்டம் தொடர்கிறது

    22/07/2024 Duration: 04min

    செய்திகள்: 23 ஜூலை 2024 செவ்வாய்க்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • சிட்னியில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த இந்திய தந்தையும் குழந்தையும் மரணம்!!

    22/07/2024 Duration: 01min

    சிட்னி Carlton ரயில் நிலையத்தில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த இரண்டு பெண் குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தந்தையும் ஒரு குழந்தையும் மரணம் அடைந்துள்ளனர். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • இலங்கை மீனவர்கள் வாழ்வாதாரத்தை இந்திய மீனவர்கள் திருடுகிறார்களா?

    22/07/2024 Duration: 10min

    இலங்கை வட பகுதி மீனவர்கள் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் வருகையால் தாம் பாதிப்படைந்துள்ளதாகவும் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் கூறுகின்றார்கள். இந்த பிரச்சினைக்கு இருநாட்டு அரசுகளும் ஒரு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

  • What caused the global technological crash that crippled various industries? - உலகையே முடக்கிய தொழில்நுட்ப செயலிழப்பிற்கு என்ன காரணம்?

    22/07/2024 Duration: 10min

    The IT outages have significantly impacted major banks, media outlets, and airlines around the world. With numerous flights suspended, passengers are now facing long queues at airports. - தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. பல விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், விமான நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

  • அமெரிக்காவின் அடுத்த அதிபராக தமிழர் தேர்வாகும் வாய்ப்பு

    22/07/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/07/2024) செய்தி.

  • இனவெறி ஏன் இன்னும் பரவலாக இருக்கிறது? அதை நீங்கள் எப்படித் தடுக்கலாம்!

    21/07/2024 Duration: 12min

    நம் நாட்டில் இனவெறியின் பரவலான தன்மையை விக்டோரியா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. அதனை சமாளிக்க சமூகத்தில் மாற்றம் தேவை என்ற அவசியத்தைக் குறிப்பிடுவதுடன் இனவெறியை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

  • இன்னும் நான்கு ஆண்டுகளில் நாட்டில் நான்கு லட்சம்பேர் கோடீஸ்வரர்களாக மாறுவர்!

    21/07/2024 Duration: 02min

    ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மக்களின் சொத்து மதிப்பு அதிகரித்து வருவதால், அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் கோடீஸ்வரர் அந்தஸ்தை அடைய உள்ளனர். இது குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல்.

  • Divorce: Understanding the law and planning your next steps - விவாகரத்து: சட்டம் என்ன சொல்கிறது? எப்படி திட்டமிடுவது?

    20/07/2024 Duration: 10min

    With divorce rates on the rise in Australia, Viji Virassamy, Principal Solicitor and Notary Public at Shal Lawyers and Associates in NSW, explains the steps to take for those considering divorce or separation. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவில் மணமுறிவு அதிகரித்துவரும் நிலையில் விவாகரத்து அல்லது பிரிந்து செல்லும் முடிவை மேற்கொள்ள நினைக்கின்றவர்கள் என்ன செய்யவேண்டும் என்று விளக்குகிறார் NSW மாநிலத்தில் Shal Lawyers and Associates நிறுவனத்தில் Principal Solicitor மற்றும் Notary Publicயாக பணியாற்றும் விஜி வீராசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    20/07/2024 Duration: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 20 ஜூலை 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

  • Vaping: prevalence, risks, and helping your teenager quit - வேப்பிங் (vaping) ஏன் ஆபத்தானது? அதற்கு அடிமையானவர்களுக்கு எப்படி உதவுவது!

    19/07/2024 Duration: 09min

    Major regulatory changes in 2024 have brought about restricted access to vaping products in Australia. The crackdown on what is dubbed a “major public health issue” could lead to an increased number of teens seeking support to overcome the nicotine addiction, experts think. Learn about the health risks and ways to help young people in their quitting journey. - நம் நாட்டில், நெருப்பின்றி புகை பிடிக்கும் வேப்பிங் (vaping) பொருட்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வேப்பிங் ஒரு “முக்கிய சுகாதார பிரச்சினை” என்று விவரிக்கப்பட்டுள்ளது, அத்துடன் பதின்ம வயதினரிடையே வேப்பிங் செய்யும் பழக்கம் பெருகி வருவது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வேப்பிங் செய்வதை நிறுத்துவது இளைஞர்களுக்குச் சவாலாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவை அறிவோம் நிகழ்ச்சித் தொடரின் இந்த நிகழ்ச்சியில், வேப்பிங் பழக்கத்திலிருந்து விலக விரும்புபவர்களுக்கு எப்படியான ஆதரவு வழங்க முடியும் என்பதை நாங்கள் ஆராய்வோம். Zoe Thomaidou தயாரித்த விவரணத்தை தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • NATO is 75. Has it achieved its objectives? - NATO, வயது 75. அதன் நோக்கங்களை அடைந்துவிட்டதா?

    19/07/2024 Duration: 17min

    NATO is 75 years old but still standing strong. An interview with journalist and political observer Ainkaran Vigneswara to detail what NATO has achieved in the past 75 years and its contribution to world peace (or not). Kulasegaram Sanchayan’s interview with Ainkaran also explores a detailed discussion on the possibility of India joining NATO. - NATO என்ற அமைப்பு 75 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. இன்றும் வலுவாக உள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் NATO சாதித்தவை என்ன, உலக அமைதிக்கு (அதன் பங்களிப்பு என்ன, இந்த அமைப்பில் இந்தியா இணைவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்ற பல விடயங்கள் குறித்து பத்திரிகையாளரும் அரசியல் அவதானியுமான ஐங்கரன் விக்னேஸ்வராவுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    19/07/2024 Duration: 08min

    அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மலையக அரசியல் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 52 மனித எலுப்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன நிலையில் புதைகுழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • நவுரு தீவில் குடிவரவு தடுப்புக்காவலில் தற்போது 96 பேர்; 22% கடுமையான மனநல பிரச்சனைகளுடன்

    19/07/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/07/2024) செய்தி.

  • பாடசாலையிலுருந்து பைக்கில் வீடு திரும்பிய 11 வயது இந்திய மாணவன் பேருந்து மோதி பலி!

    19/07/2024 Duration: 01min

    குயின்ஸ்லாந்து மாநிலம் Sunshine Coast-இல் இரு சக்கர பைக்-இல் பாடசாலை விட்டு வீடு திரும்பிய 11 வயது பாடசாலை மாணவன் ஒருவன் 6 மாணவர்களை ஏற்றி வந்த பாடசாலை பேருந்து மோதி மரணம் அடைந்துள்ளார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • Moonlanding and the Dish at Parks, NSW - சந்திரனில் மனிதன் முதன் முதல் காலடி வைத்த போது......

    19/07/2024 Duration: 03min

    Kalaththulli is a compilation of Historic incidents, memorable events, Australian past, Tamil history and heritage and more. In this episode, our producer - பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.

  • Paris 2024: ஒலிம்பிக்தீபம் ஏந்திய தமிழன் - புதுமைகளும் முன்னேற்பாடுகளும்

    18/07/2024 Duration: 11min

    அடுத்தவாரம் பாரிஸ் நகரில் ஆரம்பமாகவுள்ள 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள், புதுமைகள் மற்றும் பல தகவல்களை பாரிஸ் நகரிலிருந்து விவரிக்கிறார் ஊடகவியலாளர் வாசுகி குமாரதாசன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • மின்சார பயன்பாட்டை அளக்க Smart Meter: கட்டணம் அதிகரிக்குமா?

    18/07/2024 Duration: 09min

    மின்சார கட்டணம் அதிகரித்து செல்கிறது. இந்த நிலையில் வீடுகளில் பொருத்தப்பட்டு வரும் ‘smart meters’ என்ற மீட்டர்கள் காரணமாகவே மின்கட்டணங்கள் அதிகரிப்பதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மைதானா? ஏன் smart meter பொருத்த மின் வழங்குநர் கட்டாயப்படுத்துகின்றனர்? இதற்கு யார் செலவழிப்பது? என்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • Millaa Millaa Falls நீச்சல் பகுதில் இந்திய மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!

    18/07/2024 Duration: 02min

    வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள பிரபலமான நீர்வீழ்ச்சி Millaa Millaa Falls-இல் உள்ள நீச்சல் இடத்தில நீந்த சென்ற இரண்டு இந்திய மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • மதம்: மணியனின் பார்வை

    18/07/2024 Duration: 10min

    தமிழகம் நன்கறிந்த ஆளுமையான தமிழருவி மணியன் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு “மதம்” எனும் தலைப்பில் வழங்கிய ஒலிக்கட்டுரை. தயாரிப்பு: றைசெல்.

page 15 from 25