Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
ஆஸ்திரேலியாவை வந்தடைந்த மற்றுமொரு படகு? தகவல்களை வெளியிட மறுக்கும் அரசு!
12/11/2024 Duration: 02minNTயின் Croker தீவில் நான்கு வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அவர்கள் புறப்பட்ட நாட்டிற்கு, அல்லது அவர்களது தாய்நாட்டிற்கு அல்லது நவுருவில் உள்ள பிராந்திய செயலாக்க மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்களா என்ற தகவல்களை ஆஸ்திரேலிய அரசு வெளியிடவில்லை.இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
உலக வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவாகவுள்ளது- WMO
12/11/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 12/11/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
Veteran Tamil actor Delhi Ganesh leaves a vacuum - டெல்லி கணேஷ்: சாதா கணேஷ் அல்ல.... வெற்றிடத்தை விட்டுச் செல்லும் கணேஷ்
11/11/2024 Duration: 10minVeteran Tamil actor Delhi Ganesh died on Saturday night, following health complications. He was 80. Kulasegaram Sanchayan presents a memoir about Delhi Ganesh with the views of Mr Mohan Raman, fellow actor, friend, and one who is proud to call Delhi Ganesh a sibling. - நேற்று முன்தினம் காலமான தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான டெல்லி கணேஷ் அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை, டெல்லி கணேஷ் அவர்களை சகோதரர் என்று வர்ணிக்கும் மூத்த நடிகர் மோகன் ராமன் அவர்களது கருத்துகளோடு முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இளையோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை வருகிறது!
11/11/2024 Duration: 07minகுழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் திட்டத்தைச் செயல் படுத்துவதற்கான முதல் நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. இதன் பின்னணியிலுள்ள செய்திகளைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் சமீபத்தில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி
11/11/2024 Duration: 09minஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசியல் கட்சிகள் போராட்டம், ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் களம், திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றா, இல்லையா என்பது குறித்த சீமான் மற்றும் விஜய் இடையே மோதல் மற்றும் தெலுங்கர்கள் பற்றி அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
-
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் COP 29 காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் தாக்கம் செலுத்துமா?
11/11/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( திங்கட்கிழமை 11/11/2024) செய்திகள். வாசித்தவர்:செல்வி.
-
போலி சான்றிதழ்களை வழங்கிய ஆஸ்திரேலிய கல்வி நிறுவனம்! சிக்கலில் மாணவர்கள்
10/11/2024 Duration: 02minAustralia Education & Career Collegeயில் போலி டிப்ளோமாக்கள் பெற்றதாகக் கூறப்படும் "மாணவர்களின்" தகுதிகளை ரத்து செய்யும் நடவடிக்கைகளில் Australian Skills Quality Authority (ASQA) இறங்கியுள்ளது.இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார முக்கிய செய்திகள்
09/11/2024 Duration: 05minஇந்த வார முக்கிய செய்திகள்: 9 நவம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
SBS Examines: In Conversation with the Governor-General - SBS Examines: கவர்னர் ஜெனரலுடன் ஒரு உரையாடல்
08/11/2024 Duration: 07minAustralia's Governor-General is hopeful about Australia's future, despite conflict and difficulty dominating headlines. - மோதல்கள் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துவதாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல்.
-
ஆஸ்திரேலியர்களின் சராசரி ஆயுட்காலம் குறைவடைந்துள்ளது!
08/11/2024 Duration: 03minஆஸ்திரேலியர்களின் ஆயுட்காலம் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சற்று குறைந்துள்ளது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
08/11/2024 Duration: 08minநாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பிற்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கையில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது; எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யக்கோரி யாழில் மீனவர்கள் போராட்டம். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
US Presidential election: It’s the economy not women’s right that decided - அமெரிக்க அதிபர் தெரிவு: பெண்ணியம் அல்ல, பொருளாதாரம்
08/11/2024 Duration: 17minPolitical observer and long-term resident of California Mithiran Karunananthan analyses the US elections with Kulasegaram Sanchayan. - அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் குறித்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா (California) மாநிலத்தில் முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருபவரும், அமெரிக்க அரசியலைக் கூர்ந்து அவதானித்து வருபவருமான மித்திரன் கருணாநந்தன் அவர்களோடு அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
நாஸி பாணியில் வணக்கம் செலுத்திய நபருக்கு சிறைத்தண்டனை விதித்த விக்டோரிய நீதிமன்றம்
08/11/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 08/11/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
“மனைவி, இரு குழந்தைகளை விட்டுவிட்டு புத்த பிக்குவானேன்”
07/11/2024 Duration: 14minதமிழ் சமூகத்தில் புத்த சமயத்தை பின்பற்றுகின்றவர்கள் எண்ணிக்கை குறைவு என்ற பின்னணியில், தமிழ் சமூகத்தை சார்ந்த புத்த மதகுரு ஒருவரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சந்தித்தது ஆச்சரியமாக இருந்தது. அவரோடு உரையாடியது வித்தியாசமான அனுபவத்தை தந்தது. பிரசாந்த் என்று முதலில் அழைக்கப்பட்ட அவர் இப்போது பந்தே சத்தவிகாரி என்று புத்த துறவியாக அறியப்படுகிறார். அவரை அவரது புத்த மடத்தில் அண்ணாமலை மகிழ்நன் அவர்களுடன் சந்தித்து றைசெல் நீண்ட நேரம் உரையாடினார். அவர் வழங்கிய நேர்முகத்தின் முதற்பாகம்.
-
தமிழின் மாபெரும் ஆளுமை: தமிழண்ணல்
07/11/2024 Duration: 08minஇருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர். மத்திய அரசின் செம்மொழி விருது, தமிழக அரசின் கலைமாமணி மற்றும் திரு.வி.க. விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். அவர் நம்மைவிட்டு மறைந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்தாலும், அவர் 2004 ஆம் ஆண்டு தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட வேளையில் நம்முடன் அவர் உரையாடியது காலத்தால் அழிக்க இயலாத பதிவு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
ஒன்பது லட்சம் பேரின் பணம் அரசிடம் உள்ளது; எப்படி உரிமை கோருவது?
07/11/2024 Duration: 08minஆஸ்திரேலியாவில் Medicare கார்டு வைத்திருக்கும் பல லட்சம் மக்களில் சுமார் 930,000 பேருக்கு சொந்தமான ஆனால் அவர்கள் உரிமை கோராத 241 மில்லியன் டாலர் பணம் தம்மிடம் இருப்பதாக பெடரல் அரசு அறிவித்துள்ளது. இதை எப்படி பெறுவது என்று விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Claire Hain. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
-
அகதிகள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய பரபரப்பான தீர்ப்பின் விவரம்
07/11/2024 Duration: 06minகாலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் அல்லது புகலிட கோரிக்கையாளர்களை கடந்த ஆண்டு சமூகத்தில் வாழ அனுமதித்த அரசு அவர்களுக்கு வழங்கிய நிபந்தனைகள் தொடர்பாக முக்கிய தீர்ப்பை High Court – தலைமை நீதிமன்றம் நேற்று புதன்கிழமை வழங்கியது. அது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் றைசெல்.
-
Can you leave your kids alone at home? - குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்லலாமா?
07/11/2024 Duration: 11minMany families have to leave their children unsupervised for a period of time either after school hours or during school holidays. When it comes to child supervision parents have a legal obligation under Australian law but the laws are not very clear on age limits or amount of time a child can be left unattended. Lawyer Henry Pill from Slater and Gordon helps us through the maze of laws that vary from state to state. - குழந்தைகளையோ, சிறுவர்களையோ வீட்டில் தனியாக விட்டுச் செல்லலாமா? இது குறித்து தமிழர்கள் சிலர் என்ன நினைக்கிறார்கள் என்ற அவர்களது கருத்துகளுடன், ஆஸ்திரேலிய சட்டம் என்ன சொல்கிறது என்று சட்ட வல்லுநர் ஒருவருடைய கருத்துகளுடனும் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
அமெரிக்க தேர்தலில் Donald Trump அமோக வெற்றிபெற்றார்
07/11/2024 Duration: 04minசெய்திகள்: 7 நவம்பர் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்
-
மாணவர் கடன்களை 20% தள்ளுபடி செய்வதாக அரசு அறிவிப்பு
06/11/2024 Duration: 06minஆஸ்திரேலிய அரசானது HELP எனப்படும் Higher Education Loan Program அல்லது மாணவர் கடனை 20% குறைப்பதாக அறிவித்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். On 3 November 2024 the Australian Government announced it will reduce every Australian’s HELP or student loan debt by 20%. This builds on the changes to make HELP and student loan repayments fairer that the Government announced on 2 November 2024.