Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 63:10:00
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • நமக்கு கிடைக்கும் குழாய் நீர் குடிக்க உகந்ததுதானா?

    16/11/2024 Duration: 11min

    ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் குழாய்நீர் குடிப்பதற்கு உகந்தது, பாதுகாப்பானது என்றே சொல்லப்பட்டுவந்தது. ஆனால் சமீபகாலமாக, குழாய் நீர் பாதுகாப்பானது இல்லை; அதில் நமக்கு தீங்குவிளைவிக்கும் வேதியல் பொருட்கள் இருக்கின்றன என்று பலரும் குறிப்பாக நிபுணர்கள், விஞ்ஞானிகள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்று விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • ஆஸ்திரேலிய, உலக நிகழ்வுகளின் இந்த வார தொகுப்பு

    15/11/2024 Duration: 05min

    இந்த வாரத்தில் ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளில் தொகுப்பு. 16 நவம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

  • நிதி பற்றிய தேர்தல் சட்ட மாற்றங்கள் 'பெரிய கட்சிகளின் சதி' என விமர்சனம்

    15/11/2024 Duration: 06min

    வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் செலவிடப்படும் தொகை போன்றவற்றுக்கு வரம்பு விதிக்க வேண்டும் என்ற சட்ட முன்மொழிவானது அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஆண்டு இறுதி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன்மொழியப்படவுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை விளக்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். The proposed legislation, which will come before parliament in its last sitting week of the year next week, proposes to cap donations to candidates and money spent on federal election campaigns.The proposed legislation, which will come before parliament in its last sitting week of the year next week, proposes to cap donations to candidates and money spent on federal election campaigns.

  • நன்நடத்தை இல்லாமையினால் விசாக்கள் ரத்துச்செய்யப்படுவது பத்து மடங்காக அதிகரிப்பு!

    15/11/2024 Duration: 02min

    Character-நன்நடத்தை அடிப்படையில் அகதிகள் உட்பட ஆஸ்திரேலிய குடியுரிமை அல்லாதவர்களின் விசாக்கள் ரத்துச்செய்யப்படுவது அதிகரித்துள்ளதால் குடிவரவுத் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • 24 வருட சேவையைக் கொண்டாடுகிறது ஆஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம்

    15/11/2024 Duration: 16min

    ஆஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம்(AMAF) 24 ஆண்டுகளாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் திட்டங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அமைப்பின் வரலாறு மற்றும் அதன் தாக்கம் நிறைந்த பணிகள் குறித்தும் AMAF இன் சிட்னியை தளமாகக் கொண்ட நிர்வாக உறுப்பினரான Dr மனோமோகன் குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார்.

  • ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்ற நீதிபதி குற்றவாளியானது எப்படி?

    15/11/2024 Duration: 08min

    டஸ்மேனிய மாநில உச்ச நீதிமன்ற நீதிபதி கிரிகோரி கீசன் (Gregory Geason), ஒரு பெண்ணைத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். சிறைத் தண்டனைக்குப் பதிலாக 100 மணி நேரம் சமூக சேவை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளார். இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • அமெரிக்காவின் மேலதிக வர்த்தக கட்டண அச்சுறுத்தலுக்கு நாம் தயாரா?

    15/11/2024 Duration: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 15 நவம்பர் 2024 வெள்ளிக்கிழமை.

  • இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: தேசிய மக்கள் சக்தி முன்னிலை

    15/11/2024 Duration: 08min

    நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டுள்ளன. அதிபர் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னிலையில் உள்ளது. இதுதொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • COP 29 காலநிலை மாநாடு: வரலாறு, முக்கியத்துவம், சவால்கள்

    14/11/2024 Duration: 09min

    ஐக்கிய நாட்டு சபையின் COP 29 எனும் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு அசர்பெய்ஜான் நாட்டில் நடந்துகொண்டுள்ளது. இமம் மாநாடு இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெறலாம் என்ற பின்னணியில், இந்த மாநாடு குறித்த வரலாற்றுப் பின்னணி, முக்கியத்துவம், சவால்கள் குறித்த விளக்கத்தை “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் றைசெல்.

  • இது ஆஸ்திரேலிய நவீன வரலாற்றின் மிக இருண்ட பக்கங்களில் ஒன்று!

    14/11/2024 Duration: 05min

    பெர்த் கடற்கரையில் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கும் ரோட்னெஸ்ட் தீவு சொல்லும் வரலாறு ஆஸ்திரேலிய நவீன வரலாற்றின் மிக இருண்ட பக்கங்களில் ஒன்று. அந்த துன்பத்தையும், கொடூரத்தையும் விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Kearyn Cox & Sam Dover. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.

  • Country-led design in Australian cities: what is it and why does it matter? - ஆஸ்திரேலிய கட்டடக்கலையில் பூர்வீகக் குடிமக்களின் பங்களிப்பு

    14/11/2024 Duration: 09min

    Country is the term at the heart of Australian Indigenous heritage and continuing practices. The environments we are part of, carry history spanning tens of thousands of years of First Nations presence, culture, language, and connection to all living beings. So, how should architects, government bodies and creative practitioners interact with Indigenous knowledge when designing our urban surroundings? - ஆஸ்திரேலியாவில் கட்டிடங்கள் மற்றும் கலை வடிவமைப்புகளை உருவாக்குவதில் பூர்வீகக்குடியின சமூகங்களின் வரலாறு மற்றும் கலாச்சார அறிவை இணைப்பதற்கு தற்போது அதிகமாக கவனம் செலுத்தப்படுகிறது. இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • How a Tamil Refugee Became a Medical Researcher - அகதியாக வந்தவர் மருத்துவ ஆராய்ச்சியாளரான கதை

    14/11/2024 Duration: 10min

    Researchers at The Children's Hospital at Westmead say they've discovered babies who die from Sudden Infant Death Syndrome (SIDS) have greatly decreased levels of a certain brain protein, known as Orexin, responsible for regulating sleep arousal. - சடுதியாகக் குழந்தைகள் இறப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடித்திருக்கிறார்கள், வெஸ்ட்மீட் குழந்தைகள் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள். SIDS என்று விவரிக்கப்படும், குழந்தைகள் சடுதியாக இறப்பது குறித்த ஆராய்ச்சியில் ஒரு தமிழரும் ஈடுபட்டுள்ளார். அருண்யா விவேகானந்தராஜா, தனது ஆராய்ச்சி குறித்தும் பெற்றோர் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.

  • அமெரிக்க அதிபரும், அதிபராக போகின்றவரும் சந்தித்தனர்

    14/11/2024 Duration: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 14 நவம்பர் 2024 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

  • சிட்னியில் அகதிகள் மேற்கொண்ட போராட்டம் 100 நாட்களை எட்டியது!

    13/11/2024 Duration: 13min

    ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் சிட்னியில் நடைபெற்றுவரும் போராட்டம் இன்று நவம்பர் 13 புதன்கிழமையுடன் 100 நாட்களை எட்டியுள்ளது. இது தொடர்பில் சுபாஸ் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.

  • “தறுதலைகளும், போக்கத்தவர்களுமே சாதியை பிடித்து தொங்கிகொண்டுள்ளார்கள்” – VKT பாலன்

    13/11/2024 Duration: 18min

    தமிழ்நாட்டில் நூறு கோடி ரூபாய் மதிப்புகொண்ட சுற்றுலா நிறுவனத்தை நடத்தி வந்தவர் VKT பாலன் அவர்கள். அவர் கடந்த திங்கள் (11 நவம்பர்) காலமானார். அவருக்கு வயது 70. மிகவும் எளிய பின்னணியிலிருந்து உச்சம் தொட்டவர் பாலன் அவர்கள். SBS தமிழ் ஒலிபரப்புக்காக நான் அவரை 2012 ஆம் ஆண்டு தொலைபேசி வழி நேர்முகம் கண்டேன். அவரின் கதையையும், கருத்தையும் முன்வைக்கும் நேர்முகத்தின் ஒருபகுதி. நிகழ்ச்சியாக்கம் – றைசெல். இது ஒரு மறு ஒலிபரப்பு.

  • விக்டோரியா முன்பள்ளி விபத்து: குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு தன் உயிரை இழந்த பெண்

    13/11/2024 Duration: 06min

    விக்டோரியாவில் Montessori முன்பள்ளி ஒன்றில் இடம்பெற்ற விபத்தின்போது, குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றிவிட்டு தனது உயிரை இழந்த பெண் ஒருவரை முழு நாடுமே போற்றிக்கொண்டாடுகிறது. இந்தச் செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • விடிந்தால் இலங்கையில் தேர்தல்: தற்போதைய நிலவரம் என்ன?

    13/11/2024 Duration: 08min

    இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்துள்ளது. நாளை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் என்று தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. நாளை தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? என்ற தலைப்பில் கருத்துப்பகிர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Migrants aren't being hired in the jobs they're qualified for. It's costing Australia billions - SBS Examines : புலம்பெயர்ந்தோர் தகுதியான வேலைகளில் பணியமர்த்தப்படாததால் பல கோடி இழப்பு

    13/11/2024 Duration: 05min

    Australia is facing a skills shortage. So why are migrants struggling to find work in line with their education and experience? - ஆஸ்திரேலியா திறன் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. புலம்பெயர்ந்தோர் தங்களுக்குத் தகுதியான வேலையைக் கண்டுபிடிக்க ஏன் போராடுகிறார்கள்?

  • தமிழக பேசுபொருள்: “நாம் தமிழர்” கட்சியில் கலகம் & மீனவர் போராட்டம்

    13/11/2024 Duration: 09min

    தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்துவரும் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து பலர் வெளியேறுகின்றனர்; தொடரும் மீனவர்கள் போராட்டம் எனும் செய்திகளின் பின்னணிகளை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • NSWஇல் ஊதிய உயர்வு கோரி தாதியர்கள் 24மணிநேர வேலைநிறுத்தம்

    12/11/2024 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 13/11/2024) செய்திகள். வாசித்தவர்:மகேஸ்வரன் பிரபாகரன்.

page 13 from 25