Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
ஊதியம் இல்லாத overtime: ஆண்டுக்கு 91 பில்லியன் டொலர்களை இழக்கும் ஆஸ்திரேலியர்கள்!
20/11/2024 Duration: 02minஆஸ்திரேலிய பணியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 91 பில்லியன் டொலர்கள் மதிப்புடைய overtime-கூடுதல் வேலையை அதற்குரிய வருவாயைப் பெறாமல் செய்து வருகின்றனர் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
“முதுமை பருவத்தில் சன்னியாசம் போவது தமிழ் பண்பாடாகவே இருந்துள்ளது”
20/11/2024 Duration: 13minதமிழ் சமூகத்தில் புத்த சமயத்தை பின்பற்றுகின்றவர்கள் எண்ணிக்கை குறைவு என்ற பின்னணியில், தமிழ் சமூகத்தை சார்ந்த புத்த மதகுரு ஒருவரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சந்தித்தது ஆச்சரியமாக இருந்தது. அவரோடு உரையாடியது வித்தியாசமான அனுபவத்தை தந்தது. பிரசாந்த் என்று முதலில் அழைக்கப்பட்ட அவர் இப்போது பந்தே சத்தவிகாரி என்று புத்த துறவியாக அறியப்படுகிறார். அவரை அவரது புத்த மடத்தில் அண்ணாமலை மகிழ்நன் அவர்களுடன் சந்தித்து றைசெல் நீண்ட நேரம் உரையாடினார். அவர் வழங்கிய நேர்முகத்தின் மூன்றாம் (நிறைவு) பாகம்.
-
“புத்த துறவியாக மாறும் முன்பே நான் மதத்தையும், சாதியையும் கடந்து வாழ்ந்தவன்”
20/11/2024 Duration: 16minதமிழ் சமூகத்தில் புத்த சமயத்தை பின்பற்றுகின்றவர்கள் எண்ணிக்கை குறைவு என்ற பின்னணியில், தமிழ் சமூகத்தை சார்ந்த புத்த மதகுரு ஒருவரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சந்தித்தது ஆச்சரியமாக இருந்தது. அவரோடு உரையாடியது வித்தியாசமான அனுபவத்தை தந்தது. பிரசாந்த் என்று முதலில் அழைக்கப்பட்ட அவர் இப்போது பந்தே சத்தவிகாரி என்று புத்த துறவியாக அறியப்படுகிறார். அவரை அவரது புத்த மடத்தில் அண்ணாமலை மகிழ்நன் அவர்களுடன் சந்தித்து றைசெல் நீண்ட நேரம் உரையாடினார். அவர் வழங்கிய நேர்முகத்தின் இரண்டாம் பாகம்.
-
சிட்னியில் ஆயிரக்கணக்கில் தமிழ் குழந்தைகள் கலந்துகொண்ட விழா!
20/11/2024 Duration: 12minNSW மாநிலத்தில் இயங்கும் பாலர் மலர் தமிழ் கல்விக் கழகம் (Balar Malar Tamil Educational Association) தனது 47 ஆவது ஆண்டு தினத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் விமர்சையாக கொண்டாடியது. Blacktown Leisure Centre, Stanhope Gardens எனும் இடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தமிழ் மழலைகள், சிறுவர்கள், இளைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ தொணடர்கள் என்று பலரும் கலந்துகொண்ட இந்த விழாவில் SBS தமிழ் ஒலிபரப்பு ஊடக அனுசரணை வழங்கி கலந்துகொண்டது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றைசெல்.
-
விக்டோரியாவிலுள்ள phone-detection கமராக்களில் நாளொன்றுக்கு 300 பேர் அகப்படுகின்றனர்!
20/11/2024 Duration: 02minவிக்டோரியா மாநிலத்தில் ஒன்பது phone and seatbelt detection கமராக்கள் முழுமையாகச் செயல்பட ஆரம்பித்த முதல் ஒன்பது மாதங்களில் சுமார் 83,400 அபராத கடிதங்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்திய பேசுபொருள்: தமிழர்கள் வாழும் மும்பை ‘தாராவி’
20/11/2024 Duration: 10minமும்பையில் தமிழர்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் வாழும் பகுதியாக அறியப்படும் தாராவி மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முக்கிய பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
Understanding Domestic Violence: insights and interventions - குடும்ப வன்முறை: சில விளக்கமும், முன்னெடுப்பும்
20/11/2024 Duration: 10minIt is emphasised that understanding domestic violence is crucial for everyone in the country. Against this backdrop, the Women in Health Network (WiHN), in collaboration with the Zen Tea Lounge Foundation, is organising an awareness session titled "Empowering Families to Find Safety Amid Violence." Krithika Muruganantham from the Women in Health Network (WiHN) will discuss domestic violence and provide insights into this initiative. Interviewer: RaySel. - நாட்டில் குடும்ப வன்முறை தொடர்பான புரிதல் அனைவருக்கும் தேவை என்று வலியுறுத்தப்படுகிறது. இந்த பின்னணில் Women in Health Network (WiHN) எனும் அமைப்பு Zen Tea Lounge Foundationயுடன் இணைந்து “Empowering - Families in violence find safety எனும் தலைப்பில் விழிப்புணர்வு அமர்வை நடத்துகிறது. இந்த நிகழ்வு NSW மாநிலத்தின் Smithfield, 15/108 எனும் இலக்கத்திலுள்ள Zen Tea Lounge Foundation எனும் இடத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு குறித்தும், குடும்ப வன்முறை குறித்தும் விளக்குகிறார் Women in Health Network (WiHN) எனும் அமைப்பின் கிருத்திகா முருகானந்தம் அவர்கள். அவரோடு உரை
-
வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் கைவிடப்படுமா?
20/11/2024 Duration: 07minநாட்டினுள் அனுமதிக்கப்படும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்கட்சி கூட்டணியும் கிரீன்ஸ் கட்சியும் தற்போது முட்டுக்கட்டை போட்டுள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
சிட்னி ரயில்வே வலையமைப்பு நான்கு நாட்கள் நிறுத்தப்பட வாய்ப்பு
19/11/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 20/11/2024) செய்திகள். வாசித்தவர்:மகேஸ்வரன் பிரபாகரன்.
-
பிரிஸ்பேனில் கணவனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்தியப்பெண்- பிந்திய தகவல்கள்
19/11/2024 Duration: 03minபிரிஸ்பேன் லோகனில் கணவனால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இந்தியப் பெண், தான் கொலை செய்யப்பட்டால் அதற்குத் தனது கணவன்தான் பொறுப்பு என்பதாக வீடியோ ஒன்றை முன்கூட்டியே பதிவுசெய்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வழக்கின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மெல்பனில் அயல்வீட்டு நபரால் குத்திக் கொல்லப்பட்ட பெண்- நடந்தது என்ன?
19/11/2024 Duration: 02minமெல்பனில் 51 வயது தாய் ஒருவர் அயல் வீட்டு நபரால் குத்திக் கொலைசெய்யப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் குறித்த பிந்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சீனா- ஆஸ்திரேலியா வர்த்தக உறவுகள் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சு!
19/11/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 18/11/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கையில் இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இருமடங்கு பெறுவார்களா?
19/11/2024 Duration: 13minஇலங்கையில் அதிபராக பதவி ஏற்ற இடதுசாரி அரசியல் பேசும் அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை எதிர்கொள்ளும் பின்னணியில், இடதுசாரிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இருமடங்கு இடங்களை கைப்பற்றுவார்களா என்ற கேள்விக்கு பதில் தருகிறார் புதிய ஜனநாயக கட்சி (மா.லெ) எனும் இடதுசாரி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சிவ.இராஜேந்திரன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
பப்புவா நியூ கினியில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் தற்போதைய நிலை!
18/11/2024 Duration: 02minபப்புவா நியூ கினியில் உள்ள பல புகலிடக் கோரிக்கையாளர்கள் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாழ்வதற்காக போராடி வருகின்றனர் என அகதிகள் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Finding a bank account that works hard for you - உங்களுக்குப் பொருத்தமான வங்கிக் கணக்கை தேர்ந்தெடுப்பது எப்படி?
18/11/2024 Duration: 09minIf you have a job, receive government benefits or want to pay your bills easily you’ll need a bank account. You may even need more than one. To join the 20 million customers who hold Australian bank accounts, take some time to find one that best suits your needs. - உங்களுக்கு ஒரு வேலை ஊடாக சம்பளம் வருகிறதென்றால், அரச சலுகைகளைப் பெறுகிறீர்கள் என்றால் அல்லது உங்கள் billகளை எளிதாகச் செலுத்த விரும்பினால், உங்களுக்கு ஒரு வங்கிக் கணக்கு தேவைப்படும். சிலவேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் கூட தேவைப்படலாம்.
-
Tamil Heritage Week to be Celebrated in Australia! - ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன்முதலாக நகரசபையொன்று தமிழர் பாரம்பரிய வாரம் கொண்டாடப்போகிறது!
18/11/2024 Duration: 08minThe Cumberland City Council has officially designated January 13th through 19th, 2025, as Tamil Heritage Week. - Cumberland City Council என்ற உள்ளூராட்சி சபை, அடுத்த வருடம், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி உள்ளிட்ட வாரத்தை" தமிழர் மரபுரிமை வாரம்” (Tamil Heritage Week) என அறிவித்துள்ளது.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
18/11/2024 Duration: 09minஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் கலவரம், நடிகர் விஜயின் தவெக கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகள் இடையே மோதல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
-
பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு: ஆஸ்திரேலியாவின் மூத்த ஒலிபரப்பாளர் Alan Jones கைது
18/11/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 18/11/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
Ticketless parking fines நடைமுறை NSW மாநிலத்தில் மாற்றப்படுகிறது
17/11/2024 Duration: 02minTicketless parking fines நடைமுறை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மாற்றப்படுகிறது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் வரலாற்று வெற்றிக்கு காரணம் என்ன?
16/11/2024 Duration: 10minஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான “தேசிய மக்கள் சக்தி” கட்சி, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் என்ன என்பது தொடர்பாக “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.