Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 63:10:00
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • பாலி-9 குழுவில் எஞ்சியுள்ளோர் விரைவில் ஆஸ்திரேலியா திரும்பவுள்ளனர்?

    25/11/2024 Duration: 02min

    இந்தோனேசியாவில் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் பாலி 9 போதைப்பொருள் கடத்தல் குழுவைச்சேர்ந்த ஐந்து ஆஸ்திரேலியர்களும் விரைவில் ஆஸ்திரேலியா திரும்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Tamil Woman Embarks on a 40,000-Kilometer Global Voyage - உலகை சுற்றி 40,000 கிலோமீட்டர் பயணிக்கும் தமிழ்ப்பெண்

    25/11/2024 Duration: 14min

    Two women officers from the Indian Navy are undertaking a remarkable eight-month journey to circumnavigate the globe, covering an astounding 40,000 kilometres at sea. - எட்டு மாதங்களில் நாற்பதாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, கடலில், உலகைச் சுற்றி பயணிக்கும் முயற்சி ஒன்றில் இந்திய கடற் படையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    25/11/2024 Duration: 09min

    மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மஹாயுதி கூட்டணி வெற்றி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் JMM தலைமையிலான இந்திய அணி வெற்றி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது மற்றும் 'ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு' என மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

  • இது ஆஸ்திரேலியாவில் 21 லட்சம் பேரை பாதிக்கிறது. நீங்களும் அதில் ஒருவரா?

    25/11/2024 Duration: 08min

    கொலஸ்ட்ரால் விழிப்புணர்வு வாரம் கடந்த வாரம் அனுசரிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் சுமார் இருபத்தொரு லட்சம் பேரை பாதிக்கும் "அமைதியான நோய்" என்று அழைக்கப்படும் கொலஸ்ட்ரால் குறித்து விரிவாக விளக்குகிறார் மருத்துவர் நிர்மலா கிருஷாந்த் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த ஆஸ்திரேலிய மாணவி: சுயாதீன விசாரணை நடத்துமாறு வலியுறுத்தல்

    25/11/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 25/11/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • நீங்கள் ஒய்வு பெறும்போது முதியோர் பராமரிப்பில் வரும் இந்த மாற்றங்கள் உங்களுக்கும் பொருந்தும்

    25/11/2024 Duration: 05min

    முதியோர் பராமரிப்பு துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை உருவாக்கும் புதிய சட்டம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் முதியோர் பராமரிப்பு செலவுகள், சிறப்பு சேவைகள், மற்றும் புதிய திட்டங்களின் நடைமுறைப் படுத்தல் போன்ற விடயங்களில் பெரும் மாற்றங்கள் அறிமுகமாகவுள்ளன. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • ஆஸ்திரேலிய, உலக நிகழ்வுகளின் இந்த வார தொகுப்பு

    22/11/2024 Duration: 05min

    இந்த வாரத்தில் ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளில் தொகுப்பு. 23 நவம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

  • வெளிநாட்டு மாணவர் குறைப்பை அரசு கைவிடும் வாய்ப்பில்லை - நிபுணர்கள்

    22/11/2024 Duration: 02min

    ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தின் கீழ், நாட்டினுள் அனுமதிக்கப்படும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்கு அரசு வரம்பு ஒன்றை நிர்ணயிப்பதற்கு எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுள்ள போதிலும், ஏற்கனவே இருக்கும் சட்டங்களைப் பயன்படுத்தி அரசு இதனை நடைமுறைப்படுத்தலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Centrelink பெயரால் இடம்பெறும் புதிய மோசடி தொடர்பில் எச்சரிக்கை!

    22/11/2024 Duration: 02min

    ஆஸ்திரேலியர்களுக்கு Centrelink நூற்றுக்கணக்கான டொலர்களை "போனஸாக” கொடுப்பதாக வெளியாகும் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Has your sleep been affected since migrating to Australia? You’re not alone - புலம்பெயர்வதால் ஏற்படக்கூடிய தூக்க பிரச்சனைகளை கையாள்வது எப்படி?

    22/11/2024 Duration: 09min

    Many people experience sleep disturbances due to stressors in their lives, including challenges associated with the migration experience. Issues such as insomnia and nightmares can affect both adults and children. Learn how to assess sleep quality, identify unhealthy sleep patterns, and determine when to seek help for yourself or a loved one. - ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு அவர்களது தூக்கம் தொடர்பில் சில சிக்கல்கள் எழுவது பொதுவானது. ஆனால் இது குறுகிய காலத்தில் சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்படும் அதேநேரம் இது இயல்பானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் தூக்கமின்மை ஒரு நாள்பட்ட மருத்துவப் பிரச்சினையாக மாறினால் உதவிபெறுவது அவசியமாகும்.

  • உங்கள் ஈரலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கான உதவிக் குறிப்புகள்!

    22/11/2024 Duration: 16min

    நம்மில் பலருக்கும் ஏற்படக்கூடிய நோய்நிலைமைகளில் ஒன்று Fatty liver disease. இது எதனால் ஏற்படுகிறது மற்றும் இதற்குத் தீர்வு என்ன என்பது உள்ளிட்ட விடயங்களை விளக்குகிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் - Gastroenterologist குமணன் நலங்கிள்ளி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    22/11/2024 Duration: 08min

    இலங்கை புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் கன்னி அமர்வில் அதிபர் அனுரகுமார உரை நிகழ்த்தினார்; மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும், குழந்தையும் மரணம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • போர்க்குற்றங்கள் செய்ததாக கூறி இஸ்ரேலின் பிரதமரைக் கைது செய்ய ஆணை

    21/11/2024 Duration: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 22 நவம்பர் 2024 வெள்ளிக்கிழமை.

  • லாவோஸில் நஞ்சூட்டிய பானம் அருந்திய மெல்பன் மாணவிகளில் ஒருவர் மரணம்

    21/11/2024 Duration: 06min

    Laos இற்கு சுற்றுலா சென்ற மெல்பன் மாணவிகள் மெதனோல் கலந்த பானத்தை உண்டதனால் ஆபத்தான நிலையில் தாய்லாந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Melbourne teen Bianca Jones dies in hospital after suspected methanol poisoning in Laos. Melbourne teen Bianca Jones has died in a Thai hospital, a week after a suspected methanol poisoning incident in neighbouring Laos that affected her and her best friend.

  • சிட்னி ரயில் வலையமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!

    21/11/2024 Duration: 02min

    சிட்னியின் ரயில் வலையமைப்பு மேற்கொள்ளவிருந்த பாரிய வேலைநிறுத்த நடவடிக்கை திட்டமிட்டபடி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • 'புகலிடக்கோரிக்கையாளர்கள் உட்பட நாடுகடத்தலை எதிர்கொள்பவர்களைப் பாதிக்கவுள்ள அரசின் சட்டத்திருத்தம்'

    21/11/2024 Duration: 03min

    Albanese அரசின் குடிவரவு தொடர்பான சட்டமுன்வடிவு, ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லாதவர்களை நீண்டகாலம் தடுத்துவைப்பதற்கு வழிசெய்யும் என மனித உரிமைகள் குழு எச்சரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • சர்வதேச ஆண்கள் தினம் அவசியம்தானா ?

    21/11/2024 Duration: 09min

    ஆண்களுக்கும் மதிப்புக் கொடுத்து அவர்களுக்குத் தனித்துவமான விடயங்களுக்கான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் ஒரு நாள், சர்வதேச ஆண்கள் தினம். இது குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • பணத்தாள்களைப் பயன்படுத்துகிறீர்களா?

    20/11/2024 Duration: 06min

    நீங்கள் கடைசியாக பணத்தாள்களைப் பயன்படுத்தினீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் பணத்தாள்களைப் பயன்படுத்தி இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். ஆனால், நாட்டிலுள்ள வணிக நிறுவனங்கள் பணத்தாள்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

  • Bunnings நிறுவனம் தனியுரிமைச் சட்டங்களை மீறியது - தனியுரிமை ஆணையர்

    20/11/2024 Duration: 08min

    வாடிக்கையாளர்களின் அங்கீகாரத்தைப் பெறாமல், அவர்களது முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை Bunnings நிறுவனம் பயன்படுத்தியதன் மூலம் தனியுரிமைச் சட்டங்களை மீறியது என்று Privacy Commissioner - தனியுரிமை ஆணையர் கண்டுபிடித்துள்ளார்.

  • காஸாவில் போர் நிறுத்தத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்கு

    20/11/2024 Duration: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 21/11/2024 - வியாழக்கிழமை

page 11 from 25