Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
காரிலிருந்து வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை எப்படி பெறுவது?
29/11/2024 Duration: 08minElectric vehicle என்ற மின்வாகனத்திலிருந்து வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை உள்ளது என்றும், உபரி மின்சாரத்தை காரிலிருந்து grid என்ற மின்விநியோக supply அலகுக்கு செலுத்தி பணம் பெற முடியும் என்றும் கூறப்படும் தகவல் குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
29/11/2024 Duration: 08minஇலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் அமைதியான முறையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன; வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் 23 மாவட்டங்களில் சீரற்றகால நிலை. இந்த செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
95 வயது முதியவரை ஆள்வதம் செய்த காவல்துறை அதிகாரி சிறை செல்வாரா?
29/11/2024 Duration: 06minஒரு கத்தியைக் காட்டி மிரட்டிய 95 வயது முதியவர் Clare Nowland மீது taser பயன்படுத்தி அவரது மரணத்திற்குக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரி அவரைப் படுகொலை செய்தார் என்று 12 நீதிமன்ற தீர்ப்புக் குழு உறுப்பினர்கள் (jurors) கடந்த வாரம் தீர்ப்புக் கூறியிருந்தார்கள்.
-
சுமார் 40 சட்டங்களை ஒரே நாளில் செனட்சபை நிறைவேற்றியது
29/11/2024 Duration: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 29 நவம்பர் 2024 வெள்ளிக்கிழமை.
-
19 வயது மனைவியைக் கொன்று உடலை அமிலத்தில் கரைத்த கணவர் கொலையை ஒப்புக்கொண்டார்
28/11/2024 Duration: 07minசிட்னியில் இரு ஆண்டுகளுக்கு முன்பு தனது 19 வயது மனைவியைக் கொன்று, உடலை அமிலத்தில் கரைக்க முயற்சித்த கணவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இது குறித்த பின்னணி தகவலை செய்தியின் பின்னணி நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் றைசெல்.
-
“மானுட விடுதலையே எமது இலக்கு” - ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை
28/11/2024 Duration: 13minகாலத்தை வென்று நிற்கும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள். தமிழீழ விடுதலை புலிகளின் கலை, பண்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக பணியாற்றியவர். அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற விடை தெரியாத நிலையில், டிசம்பர் 3 (1948) பிறந்த புதுவை இரத்தினதுரை அவர்கள் தனது 75 ஆவது வயதை நிறைவு செய்யும் இவ்வேளையில் அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு 2006 ஆம் ஆண்டு வழங்கிய நேர்முகத்தை மீள் பதிவு செய்கிறோம். அவரோடு உரையாடியவர் றைசெல். நேர்முகம் – பாகம் 1.
-
கணவனைக் கொன்று துண்டு துண்டுகளாக வெட்டி வீசிய சிட்னி பெண்? - பிந்திய விவரங்கள்
28/11/2024 Duration: 02minசிட்னி Greenacre பகுதியில் மனைவியால் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டதாகக் கூறப்படும் நபர், கொலை செய்யப்பட்ட அன்றையதினம் தனது சொத்துக்கள் மீதான அதிகாரத்தை மனைவிக்கு வழங்கும் power of attorneyஇல் கையொப்பமிட்டிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சாதி பாகுபாடு இனவெறி என்கிறது ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையம்!
28/11/2024 Duration: 07minநாட்டில் National Anti-Racism Taskforce தேசிய இனவெறி எதிர்ப்பு செயலணி ஒன்றை அமைக்குமாறு ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. நாட்டில் நிலவும் சாதியை, அதன் மூலம் கடைபிடிக்கப்படும் பாகுபாட்டை National Anti-Racism Framework குறிப்பிடுகிறது. ஆங்கில மூலம் SBS-Newsக்காக Alexandra Jones. SBS – தமிழுக்காக தயாரித்தவர்: றைசெல்.
-
Why did India plan to spend 1,500 Crore Rs. (A$260 million) ?? - 1500 கோடி ரூபாய் பணத்தை இந்தியா ஏன் செலவிடுகிறது?
28/11/2024 Duration: 10minThe Government of India announced a plan at a cost of Rs 1,500 crore (260 million Australian Dollars) in 2013. Kulasegaram Sanchayan talked to Prof. G. Rajasekaran, one of the founders of this project, to find out more on the purpose of this project, what benefits this project may bring to an average taxpayer, what is a neutrino, and what the India based Neutrino Observatory is trying to achieve. - இந்திய மத்திய அரசு 1500 கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டத்தை 2013ஆம் ஆண்டில் அறிவித்தது. இந்தத் திட்டத்தின் தேவை என்ன? அதனால் என்ன பலன்களை மக்கள் அடையவிருக்கிறார்கள், இந்தத் திட்டத்தால் நிறுவப்படும் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் என்ன செய்ய விழைகிறது, நியூட்ரினோ என்றால் என்ன என்பது பற்றி, அதன் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர்களில் ஒருவரான பேராசிரியர் ராஜசேகரனிடம் அப்போது கேட்டுத் தெரிந்து கொண்டார் குலசேகரம் சஞ்சயன்.
-
செனட் அவையில் செனட்டர்கள் Payman மற்றும் Hanson கடுமையான வாக்குவாதம்
28/11/2024 Duration: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 28 நவம்பர் 2024 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
NSW ஓட்டுநர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
27/11/2024 Duration: 02minநியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த ஆண்டு random drug test - எழுந்தமானமாக போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுநர்களில் 10 பேரில் ஒருவர், positive-நேர்மறை சோதனை முடிவை காண்பித்ததாக NRMAஇன் புதிய அறிக்கை கூறுகின்றது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
வெளிநாடு செல்ல திட்டமிடுகிறீர்களா? ஆஸ்திரேலிய டொலர் எங்கே வலுவாக உள்ளது
27/11/2024 Duration: 02minஆண்டின் இறுதி நெருங்கும் வேளையில் விடுமுறைக்காக வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்வது பற்றி யோசிக்கிறீர்களா? உங்கள் பயணம் ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றால், வரும் வாரங்களில் நீங்கள் எந்தெந்த நாடுகளைத் தெரிவுசெய்யலாம் என்பது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
நாம் வெளியில் செல்லும்போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?
27/11/2024 Duration: 09minநாம் வெளியில் செல்லும்போது எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற கேள்விக்குப் பதில் தருகிறார் விக்டோரிய காவல்துறையைச் சேர்ந்த Acting Sergeant ராஜேஷ் சாம்பமூர்த்தி. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
“ஆஸ்திரேலிய தமிழ் பாட புத்தகங்களில் அதிக மாற்றம் தேவை” – கலாநிதி குலம்
27/11/2024 Duration: 10minநியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் தமிழ் மொழி கற்றுக்கொடுக்க பயன்படுத்தப்படும் பாட நூற்களில் ஆண்டு நான்கு முதல் எட்டு வரையான தமிழ்ப் பாடநூற்களில் அடங்கியுள்ள பாடங்கள், மாணவர்களது அடையாளம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதில் ஆற்றக்கூடிய பங்கை ஆய்வு செய்து குலசிங்கம் சண்முகம் அவர்கள் Western Sydney பல்கலைக்கழகத்திடமிருந்து கலாநிதிப்பட்டம் (PhD) பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் சமூகமொழிப் பாடநூற்கள் கலாநிதி பட்டம் பெறுமளவு ஆழமாக ஆய்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். தனது ஆய்வு குறித்தும், இந்த ஆய்வு தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தவேண்டிய தாக்கங்கள் குறித்தும் கலாநிதி குலசிங்கம் சண்முகம் அவர்கள் SBS ஒலிப்பதிவு கூடத்தில் றைசெலுடன் கலந்துரையாடுகிறார்.
-
ஆஸ்திரேலியாவில் விசா இல்லாமல் தங்கியிருக்கும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்!
27/11/2024 Duration: 07minஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான உரிய விசா இல்லாமல் சட்டவிரோதமான முறையில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இங்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
அதானிக்கு எதிரான அமெரிக்க பிடியாணையும், அதன் தமிழ்நாடு & இந்திய அரசியல் தாக்கமும்
26/11/2024 Duration: 09minஅமெரிக்க நீதிமன்றம் இந்திய தொழிலதிபர் அதானிக்கு பிடியாணை பிறப்பித்திருக்கும் விவகாரம் டெல்லி முதல் தமிழ்நாடு வரை எதிரொலிக்கிறது. அந்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
NSW Health எச்சரிக்கை: சிட்னியின் மேற்குப் பகுதி வெப்பநிலை 39Cஐ எட்டலாம்
26/11/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 27/11/2024) செய்திகள். வாசித்தவர்:மகேஸ்வரன் பிரபாகரன்.
-
பள்ளிக் குழந்தைகளையுடைய விக்டோரிய குடும்பங்களுக்கு $400 கொடுப்பனவு!
26/11/2024 Duration: 02minகுடும்பங்கள் மீதான வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில், பள்ளிக் குழந்தைகளையுடைய விக்டோரிய மாநில பெற்றோருக்கு 400 டொலர்கள் கொடுப்பனவு இந்தவாரம் முதல் வழங்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
அடுத்த ஆண்டு எந்த நகரங்களில் வீட்டு விலை அதிகரிக்கும்? குறையும்?
26/11/2024 Duration: 02min2025இல் சிட்னி மற்றும் மெல்பனில் வீட்டு விலைகள் மேலும் குறையும் அதே நேரத்தில் பெர்த் நகரம் வலுவான அதிகரிப்பை அனுபவிக்கும் என SQM Researchஇன் Boom and Bust அறிக்கை கூறுகின்றது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
லேபர் அரசின் வீட்டுவசதி தொடர்பிலான சட்ட முன்வடிவுகளுக்கு கிரீன்ஸ் கட்சி ஆதரவு
26/11/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 26/11/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.