Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 61:35:54
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • Centrelink பெயரால் இடம்பெறும் புதிய மோசடி தொடர்பில் எச்சரிக்கை!

    24/05/2024 Duration: 02min

    Centrelink 1800 டொலர்கள் போனஸ் கொடுப்பனவை வழங்குவதாக வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாம் எனவும் அது ஒரு மோசடி எனவும் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • We will be directly or indirectly involved in all the products you use - Vishnu Prasad - “நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் நேரடியாக அல்லது மறைமுகமாக நாங்கள் இருப்போம்”

    24/05/2024 Duration: 15min

    Vishnu Prasad Research Centre (VPRC) has been conducting research since 2018 and has expanded to 19 R&D departments, holding more than 69 patents and 180 innovations. It collaborates with various institutions, researchers, and academics worldwide. Vishnu Prasad, the founder of VPRC, visited SBS and shared his scientific journey with RaySel. - இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல ஆய்வுகளை மேற்கொண்டு, பெரும் ஆய்வு மையமாக உருவாகி வருகிறது விஷ்ணு பிரசாத் ஆராய்ச்சி மையம் (VPRC). உலகில் 69 க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் மற்றும் 180 கண்டுபிடிப்புகளை கொண்டிருக்கும் VPRC மையம் 19 R&D துறைகளுக்கு விரிவடைந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் VPRC மையத்தின் நிறுவனர் விஷ்ணு பிரசாத் அவர்கள் தனது அறிவியல் பயணத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். SBS ஒலிப்பதிவு கூடத்தில் அவரை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    24/05/2024 Duration: 08min

    இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைகளுக்கான தெரிவுகளை மீள நடாத்த தீர்மானம்; தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பு இழுபறி நிலை; தொடரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Powerball: 150 மில்லியன் டொலர்கள் வென்றவர் யார்? தேடுதல் தொடர்கிறது

    24/05/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 24/05/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • Half a million claims still waiting as Centrelink and Medicare cut down backlogs - நிலுவையிலுள்ள ஐந்து இலட்சம் கோரிக்கைகளைக் கையாள்வதற்கு 3000 புதிய ஊழியர்கள்

    23/05/2024 Duration: 08min

    Services Australia has halved its Centrelink and Medicare backlog in the space of three months, but well over half a million claims are still awaiting a response. Karthikeyan Ramanathan, a social services volenteer explains in detail. Segment produced by Praba Maheswaran. - Centrelink மற்றும் Medicare சேவைகளுக்கான கோரிக்கைகளை Services Australia மூன்று மாத இடைவெளியில் பாதியாகக் குறைத்துள்ளது. ஆனாலும் அரை மில்லியனுக்கும் அதிகமான கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் காத்திருக்கின்றன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் சிட்னியில் வசித்துவரும் சமூகசேவையாளர் கார்த்திகேயன் ராமநாதன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • ஆஸ்திரேலியாவில் பரவ ஆரம்பித்துள்ள புதிய வகை கோவிட் திரிபுகள்!

    23/05/2024 Duration: 02min

    "FLiRT" எனப் பெயரிடப்பட்ட கோவிட்-19 புதிய தொகுதி திரிபுகள் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தநிலையில், அது தற்போது ஆஸ்திரேலியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மனைவியைக் கொன்ற வழக்கில் 40 ஆண்டுகளின் பின் சிறையிலடைக்கப்பட்ட நபர்- பின்னணி என்ன?

    23/05/2024 Duration: 08min

    40 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவியை கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கிறிஸ்டோபர் டோசன் என்ற சிட்னி நபர் தான் குற்றமற்றவர் என தொடர்ந்தும் வாதாடி வருகிறார். அத்துடன் தனக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை ரத்துச் செய்யப்பட வேண்டுமென அவர் தாக்கல்செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை அண்மையில் நடைபெற்றது. இவ்வழக்கின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • வீட்டுக்கடன் அழுத்தும்போது ஏன் வங்கிகள் உதவுவதில்லை? – ASIC விமர்சனம்!

    23/05/2024 Duration: 10min

    வங்கியிடமிருந்து வீட்டுக் கடன் பெற்றுவிட்டு அதை கட்ட முடியாமல் தவிக்கின்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக ASIC எனப்படும் ஆஸ்திரேலிய செக்யூரிட்டீஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் கமிஷனின் அறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Kath Landers & Hannah Kwon. தமிழில்: றைசெல்.

  • முடி ஏன் கொட்டுகிறது? வழுக்கை ஏன் ஏற்படுகிறது? தீர்வு என்ன?

    23/05/2024 Duration: 09min

    நாம் உண்ணும் உணவு பலவேளைகளில் மருந்தாக செயல்படுகிறது என்று கூறுகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஏன் முடி கொட்டுகிறது? வழுக்கை ஏற்படுகிறது? என்ற கேள்விகளுக்கு பதிலும், அதற்கான தீர்வையும் முன்வைக்கிறார் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். நேர்முகம் பதிவு செய்யப்பட்ட ஆண்டு: 2018

  • Essential Steps of CPR Everyone Should Know - துடிப்பு நின்ற இதயத்தை உங்களாலும் துடிக்க வைக்க முடியும்!!

    23/05/2024 Duration: 12min

    Doing CPR right away can double or even triple a person’s chance of surviving cardiac arrest. Dr Dayamathi Jeganathan who works as a Senior Emergency Specialist at Blacktown and Westmead Hospital explains more about CPR. - ஒருவரின் இதயம் ஏதாவது காரணத்தினால் திடீரென நின்று போனால் உடனே CPR செயவதினால் அதனை இயங்க வைத்து அவர் உயிரை காப்பாற்ற முடியும். CPR என்றால் என்ன? அதனை எல்லோரும் கற்க வேண்டிய அவசியம் என்ன போன்ற CPR குறித்த பல கேள்விகளுக்கு பதில் கூறுகிறார் Blacktown மற்றும் Westmead மருத்துவமனைகளில் Senior Emergency Specialistஆக பணியாற்றி வரும் டாக்டர் தயாமதி ஜெகநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல்

    22/05/2024 Duration: 02min

    ஆஸ்திரேலியாவில் முதல் தடவையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கை குறித்து தற்போதைய சர்வதேச அமைப்புக்களின் அறிக்கையும் அவை குறித்த எதிர்வினைகளும்!

    22/05/2024 Duration: 10min

    இலங்கையில் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், போருக்கு பின்னரான தற்போதுள்ள நிலைமை குறித்து சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகள் வெளிவந்துள்ளன. இது இந்த அறிக்கைகளில் கூறப்பட்டிருக்கும் அம்சங்களையும், அதுகுறித்த எதிர்வினைகளையும் தொகுத்து “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • இந்திய தேர்தல்: வட கிழக்கு மாநிலங்களின் கள நிலவரம்

    22/05/2024 Duration: 10min

    இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடர்ந்துகொண்டுள்ளது. இந்த பின்னணியில், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல கிழக்கு மாநிலங்களில் நிலவும் கள நிலவரத்தை விளக்குகிறார், தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் பனிரண்டாம் பாகம்.

  • Can you offset business losses against employment income? - ABN ஊடாக வருமானம் ஈட்டுபவர்கள் GSTக்கு பதிவு செய்ய வேண்டுமா?

    22/05/2024 Duration: 13min

    Mr Jude Suresh Gnanapragasam-Wizard Accounting|Partner – Accounting & Business Advisory CAANZ,FIPA,ATI,FCCA, ACA,MBA, BSc (mgt) explains what ABN income is for individuals, whether registering for GST is compulsory, and how to manage cash flow implications of ABN tax liabilities. Produced by Renuka Thuraisingham. - ஒரு தனிநபருக்கான ABN வருமானம் என்றால் என்ன? வேலை வருமானத்திற்கும் ABN வருமானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? ABN ஊடாக வருமானம் ஈட்டுபவர்கள் கட்டாயம் GSTக்கு பதிவு செய்ய வேண்டுமா என்பது உட்பட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த திரு ஜுட் சுரேஷ் ஞானப்பிரகாசம்-Wizard Accounting|Partner – Accounting & Business Advisory CAANZ,FIPA,ATI,FCCA, ACA,MBA, BSc (mgt). அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • நியூ கலிடோனியாவிலிருந்து பல ஆஸ்திரேலியர்கள் மீட்பு

    21/05/2024 Duration: 02min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 22/05/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • விக்டோரியாவில் நிறுவப்பட்ட புதிய கமராக்களில் மாதமொன்றுக்கு 5000 ஓட்டுநர்கள் அகப்படுகின்றனர்

    21/05/2024 Duration: 02min

    விக்டோரியா மாநிலத்தில் புதிய கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டு 10 மாதங்கள் ஆகின்ற நிலையில், இவற்றில் சிக்கிய 52,000 வாகன ஓட்டிகளிடமிருந்து seatbelt அணியாமை மற்றும் கைபேசி பாவனை போன்றவற்றிற்காக மில்லியன் டொலர்கள் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Implications of the Iranian President's Death on Iran and Global Politics - ஈரான் அதிபரின் மறைவு ஈரானிலும், உலகிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

    21/05/2024 Duration: 11min

    The sudden death of Iranian President Ebrahim Raisi and Foreign Minister Hossein Amir-Abdollahian in a plane crash last Sunday has sent shockwaves through Iran and the international community. In this context, Prof. Bernard D' Sami, a Professor of History at Loyola College (Autonomous), Chennai, and a media commentator on international affairs and human rights, analyzes the impact of President Raisi's death. - ஈரான் அதிபர் Ebrahim Raisi அவர்களும், வெளியுறவுத்துறை அமைச்சர் Hossein Amir-Abdollahian உள்ளிட்டவர்கள் கடந்த ஞாயிறு விமான விபத்தில் உயிரிழந்தது ஈரானில் மட்டுமல்ல, உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பின்னணியில் ஈரான் அதிபர் Ebrahim Raisi அவர்களின் மறைவும், அது ஏற்படுத்தும் தாக்கமும் குறித்து அலசுகிறார் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி அவர்கள். அவர் சென்னை லயோலா கல்லூரியில் சமூக அறிவியல் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • ஆண்டுக்கு 206,000 டொலர்கள் வரை சம்பாதிக்கும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள்!

    21/05/2024 Duration: 02min

    விக்டோரியாவின் முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் பணிபுரியும் traffic controllers - போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஆண்டுக்கு 206,000 டொலர்கள் வரை சம்பாதிப்பதாக தெரிவிக்கப்படும்நிலையில் இதனை தொழிற்சங்கமான Construction, Forestry and Maritime Employees Union -CFMEU நியாயப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • சிட்னியில் ஆஸ்திரேலியா-இந்தியா உறவுகளுக்கான புதிய மையம் ஆரம்பம்

    21/05/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 21/05/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

page 9 from 25