Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 61:35:54
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • “ஆஸ்திரேலியாவில் தொழில்துறை புரட்சி போன்ற பெரிய மாற்றம் வரப்போகிறது” - பிரதமர்

    11/04/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 11/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • R M வீரப்பனின் மூன்று முகங்கள்!

    10/04/2024 Duration: 13min

    மறைந்த தமிழக முதல்வர் MGRன் வலது கரமாகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பளாராகவும், திராவிட அரசியல் ஆளுமையாகவும் திகழ்ந்த R.M.வீரப்பன் அவர்கள் காலமானார். அவரின் பல முகங்களை விளக்குகிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • குடிவரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: விசா நிபந்தனைகளை கடுமையாக்கும் நியூசிலாந்து

    10/04/2024 Duration: 02min

    குடிவரவாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதையடுத்து நாட்டின் குடிவரவு முறைமையை மறுசீரமைப்பதுடன் சில விசா நிபந்தனைகளை கடுமையாக்கவுள்ளதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Embracing the Joy of Eid: Our Festive Celebrations - ரமலான் பெருவிழாவை நாங்கள் எப்படி கொண்டாடுகிறோம்?

    10/04/2024 Duration: 15min

    Yagina Ismail, Ishaq Ismail and Mohamed Badurudeen share their experiences of celebrating Eid festival in Australia. Produced by RaySel. - ரமலான் – ஈகைத் திருநாள் குறித்த சிறப்பு கலந்துரையாடல். பங்கேற்கின்றவர்கள்: மொஹமத் பதுருதீன், இஷாக் இஸ்மாயில் & யஹினா இஸ்மாயில். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • இந்திய தேர்தல் களம்: பரப்புரை உலா

    10/04/2024 Duration: 10min

    இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் பின்னணியில், இந்திய தேர்தல் குறித்த கள நிலவரம் குறித்த சிறப்பு நிகழ்ச்சியின் நான்காம் பாகம். முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள்.

  • Average Australian can't afford to buy a house anywhere in the country- new research - ஆஸ்திரேலியாவில் வீடு வாங்க வேண்டுமெனில் $164,400 ஆண்டுவருமானம் தேவை!

    10/04/2024 Duration: 08min

    Australians aiming to buy a home face grim prospects as new research reveals the daunting income required to afford a house in any capital city. Data from the Parliamentary Library, commissioned by the Greens, indicates that to purchase a home, a borrower would need to earn $164,400 annually—nearly two-thirds more than the average salary of $98,218. Renuka Thuraisingham brings the story. - ஒருவர் ஆஸ்திரேலிய நகரமொன்றில் தனக்கான வீட்டை வாங்கி அதற்குரிய mortgage -ஐ செலுத்துவதற்கு 164,400 டொலர்களை ஆண்டுவருமானமாக ஈட்ட வேண்டியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பாய்வு ஒன்று கூறுகின்றது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • கிழக்கில் தொடரும் போராட்டங்கள்! கண்டுகொள்ளாத அரசு

    10/04/2024 Duration: 07min

    இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் நெருங்குகின்றது. மீள்குடியேற்றம், காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு, சிங்கள மயமாக்கல் என பல்வேறு பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் காணப்படவில்லை. இதேவேளையில், கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சல் நிலம் அபகரிப்புக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. அதுபோல் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு நிர்வாக அதிகாரம் கோரி மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த போராட்டங்களுக்கு தீர்வுகள் இல்லாத நிலையில் போராட்டங்கள் தொடர்கின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • ஈகைத் திருநாள் சிறப்புச் செய்தி

    09/04/2024 Duration: 07min

    ஈகைத் திருநாள் (ரமலான்) குறித்த சிறப்பு செய்திய வழங்குகிறார்: தமிழ்நாட்டில் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகின்றவரும், சென்னை இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச் செயலாளருமான M.A அப்துல்ஹமீது அவர்கள். இது மறு ஒலிபரப்பு. 2014 ஆம் ஆண்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

  • பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலிக்கவேண்டும் - வெளியுறவு அமைச்சர்

    09/04/2024 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 10/04/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • M. G. R.'s right-hand falls - எம். ஜி. ஆரின் வலது கரம் சாய்ந்தது

    09/04/2024 Duration: 10min

    Renowned Tamil politician R. M. Veerappan (aged 94), has passed away. - தமிழக அரசியல்வாதி, திரைப்படத் தயாரிப்பாளர், தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சராகப் பணியாற்றிய இராம. வீரப்பன் அவர்கள் நேற்று காலமானார்.

  • இந்தியா- ஆஸ்திரேலியா விமானசேவைகள் மேலும் விரிவாக்கப்படுவதாக IndiGo தெரிவிப்பு

    09/04/2024 Duration: 02min

    இந்தியாவின் முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்றான IndiGo மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான Qantas ஆகியவை இடையிலான codeshare ஒப்பந்தம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதையடுத்து, இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் ஆஸ்திரேலியாவின் மேலும் பல நகரங்களுக்குச் செல்வதற்கான வசதி கிடைக்கிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவின் பிரபல சுற்றுலாத் தலமொன்றில் இனி பணநோட்டுக்களைப் பயன்படுத்த முடியாது

    09/04/2024 Duration: 02min

    ஆஸ்திரேலியாவின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான Hamilton தீவு cashless எனப்படுகின்ற முறைக்கு மாறியுள்ளதால் அங்கு இனி பணநோட்டுக்களைப் பயன்படுத்த முடியாது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • AUKUS இரண்டாம் கட்டத்தில் ஜப்பான் இணைந்து கொள்ளுமா?

    09/04/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் இன்றைய (செவ்வாய்க்கிழமை 09/04/2024) செய்திகள்.

  • What are the pros and cons of Intermittent Fasting? - Intermittent Fasting உடல் நலத்திற்கு தீங்கானதா?

    08/04/2024 Duration: 12min

    Intermittent fasting has emerged as a popular dietary approach with purported health benefits, but many individuals are still unfamiliar with its fundamentals and how it may fit into their lives. Dr Naleemudeen Sihabdeen explains the multifaceted effects of Intermittent fasting on the human body, shedding light on both its benefits and potential implications. Produced by Renuka Thuraisingham. - உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் பல்வேறு விதமான முறைகளைக் கையாள்வது வழக்கம். அந்த முறைகள் தொடர்பிலும் குறிப்பாக Intermittent Fasting முறை தொடர்பிலும் விளக்குகிறார் உடல் எடை பராமரிப்பு தொடர்பில் நிபுணத்துவம்கொண்ட மருத்துவர் நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Please wait for (a long time for) Services - சேவைகளுக்காக (நீண்ட நேரம்) காத்திருக்கவும்

    08/04/2024 Duration: 08min

    A recent report indicates that 7 million phone calls made to service providers Centrelink and Medicare were not answered. The minister for Government Services, Bill Shorten, says that it will take a while for the situation to improve. - Centrelink மற்றும் Medicare ஆகிய இரண்டு சேவை வழங்குனர்களுக்கும் மக்கள் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளில் 7 மில்லியன் அழைப்புகளுக்குத் தொலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை என்று ஒரு அண்மைய அறிக்கை குறிப்பிடுகிறது. நிலைமையை மேம்படுவதற்கு சிறிது காலம் ஆகும் என்று Minister for Government Services – அரச சேவைகளுக்கான அமைச்சர், Bill Shorten தெரிவித்துள்ளார்.

  • Exploring the Legal and Ethical Dimensions of Forced Repatriation - நாடு திரும்ப மறுத்தால் சிறையில் அடைப்பது குறித்த விவாதம்!

    08/04/2024 Duration: 12min

    In our SBS studio, RaySel hosts a discussion with asylum seekers Tamil Selvan and Abishek, alongside Renuka Inbakumar, spokes person of the Tamil Refugee Council. Against the backdrop of proposed legislation in Australia, they explore the complex challenges and human rights implications facing those seeking refuge. - ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்களின் புகலிடகோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பவேண்டும். ஆனால் அப்படி அவர்கள் சொந்த நாடு திரும்ப மறுத்தால் அவர்களை சிறைக்கு அனுப்ப அரசுக்கு அதிகாரம் தரும் சட்ட முன்வடிவை ஆளும் லேபர் அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. இந்த பின்னணியில், புகலிடம் கோரிக்கையாளர்களான தமிழ் செல்வன் மற்றும் அபிஷேக் ஆகியோரையும், தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் ரேணுகா இன்பக்குமார் அவர்களையும் நமது SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்திக்கிறோம். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

  • இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

    08/04/2024 Duration: 08min

    'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த சர்ச்சை, நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்திய முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனைகளில் பல கோடி ருபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் மற்றும் பரபரக்கும் தமிழக தேர்தல் பிரச்சாரங்கள் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • மேற்கு ஆஸ்திரேலியாவை வந்தடைந்த புகலிடக்கோரிக்கையாளர் படகு- எதிர்க்கட்சி விமர்சனம்!

    08/04/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 08/04/2024) செய்தி. வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    05/04/2024 Duration: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 6 ஏப்ரல் 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • ஆஸ்திரேலியாவில் புதிய உச்சம் தொட்ட சர்வதேச மாணவர் எண்ணிக்கை!

    05/04/2024 Duration: 02min

    ஆஸ்திரேலியாவில் உள்ள சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

page 18 from 25