Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 108:50:48
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • 2025ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர்!

    22/05/2025 Duration: 03min

    இந்திய எழுத்தாளர் பானு முஷ்டாக் இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வையால் பார்வையிழப்பு ஏற்படுமா?

    22/05/2025 Duration: 12min

    ஒருவருக்கு தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைப் பற்றியும் இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

  • சிட்னி ரயில் சேவை இயல்புக்கு திரும்பியது, திங்கள் பயணம் இலவசம்!

    22/05/2025 Duration: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 22 மே 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • அழிந்து வரும் தேனீக்கள் - பாதுகாக்க வேண்டிய அவசியம்

    22/05/2025 Duration: 13min

    மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேனீக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள், எவ்வாறு தேனீக்களை பாதுகாப்பது மற்றும் வீட்டில் எவ்வாறு தேனீக்கள் வளர்ப்பது போன்ற பல தகவல்களை எடுத்து வருகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • தமிழ் சிறுகதையின் தந்தை!

    21/05/2025 Duration: 02min

    ‘காவியத்துக்கு ஒரு கம்பன், கவிதைக்கு ஒரு பாரதி எனின், சிறுகதைக்கு ஒரு புதுமைப்பித்தன்’ என்று இலக்கியத்தின் பேராளுமை ஜெயகாந்தன் குறிப்பிடுகிறார். அப்படியான தமிழ் சிறுகதையின் முன்னோடியான புதுமைப்பித்தன் குறித்த “காலத்துளி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

  • நாடுகடத்தப்படுவதற்காக சிட்னி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிச்சென்ற நபர்- பிந்திய தகவல்

    21/05/2025 Duration: 02min

    சிட்னி விலவூட் குடிவரவு தடுப்புமுகாமிலிருந்து சிட்னி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிச்சென்ற நபர் குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கையில் உள்ள முதியோர் நல மேம்பாட்டிற்காக சிட்னியில் 'Charity Walk'

    21/05/2025 Duration: 10min

    Jaffna Medical Faculty Overseas Alumini – Australia Doctors Charity Fund இலங்கையில் உள்ள முதியோர் நல மேம்பாட்டிற்காக சிட்னியில் நடத்தவுள்ள Charity Walk நிதிதிரட்டும் நடைபயணம் குறித்து உரையாடுகிறார்கள் சிட்னியில் Westmead மருத்துவமனையில் முதியோர் நல மருத்துவராக பணியாற்றிவரும் டாக்டர் பூரணி முருகானந்தம் மற்றும் Hunter New England Health Care Services-இல் Emergency Physician-ஆக பணியாற்றிவரும் டாக்டர் புஷ்பகுமார் பூர்ணலிங்கம். அவர்களோடு உரையாடுகிறார் செல்வி.

  • வட்டி வீதம் குறைந்ததால் வீடுகளின் விலை அதிகரிக்குமா?

    21/05/2025 Duration: 07min

    ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி (RBA) வட்டி வீதத்தை 3.85 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த வட்டி வீத குறைப்பு வீடுகளின் விலையை அதிகரிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • பயங்கரவாதியாக முன்பு அறிவித்துவிட்டு இப்போது அமெரிக்காவும், மேற்கும் கைகுலுக்குவது ஏன்?

    21/05/2025 Duration: 11min

    சிரியா நாட்டின் புதிய அதிபர் Ahmed al- Sharra வின் தலைக்கு 10 மில்லியின் டாலர் சன்மானம் தரப்படும் என்று அமெரிக்கா கூறி வந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் அவரோடு கைகுலுக்கிக்கொள்கின்றன. இதற்கான காரணத்தையும், வரலாற்றுப் பின்னணியையும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • இலங்கை அகதி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு: இந்த வார தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி

    21/05/2025 Duration: 07min

    வங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய கட்டுப்பாடு விதித்துள்ள இந்தியா; இந்தியாவில் மீண்டும் கோவிட் தொற்று; இந்தியா என்ன தர்ம சத்திரமா என்று இலங்கை அகதி வழக்கில் உச்சநீதிமன்றம் வெளியிட்டிருக்கும் கருத்து; நீட் தேர்வு பயத்தால் தமிழக மாணவர் தற்கொலை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • NSW mid north coast பகுதியில் மழை வெள்ள அச்சுறுத்தல்

    20/05/2025 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 21/05/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Have you been told your visa will be cancelled? This is how misinformation enables visa abuse - SBS Examines : தவறான தகவல்களினால் விசா குறித்த பயம் - விசா முறைகேடு நடைபெற உதவுகிறதா?

    20/05/2025 Duration: 07min

    The migration system is complex and confusing. Experts say a lack of accessible support and credible information is leading to visa abuse. - ஆஸ்திரேலியாவில் நீங்கள் விசா ஒன்று பெற்று சட்டரீதியாக வசித்து வருகிறீர்களா? உங்களின் விசா ரத்து செய்யப்படுவதற்கோ அல்லது நீங்கள் நாடு கடத்தப்படுவதற்கோ நீங்கள் உண்மையில் பிழையாக என்ன செய்திருக்க வேண்டும்.

  • நாட்டின் வட்டி வீதம் மீண்டும் குறைக்கப்பட்டது!

    20/05/2025 Duration: 02min

    ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • நூற்றாண்டுகால லிபரல்-நேஷனல் கூட்டணி முறிந்தது!

    20/05/2025 Duration: 02min

    நேஷனல் கட்சி லிபரல் கட்சியுடன் மீண்டும் கூட்டணி ஒப்பந்தத்தில் இணையாது என்று நேஷனல் தலைவர் Littleproud அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவில் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் குறையுமா? - இன்று தெரியவரும்

    20/05/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 20/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • அனைத்து குழந்தைகளுக்கும் இலவச பொதுப் போக்குவரத்து-விக்டோரியா அரசு அறிவிப்பு!

    19/05/2025 Duration: 02min

    விக்டோரியாவில் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச பொதுப் போக்குவரத்து வசதியை வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • காவல்துறையில் இணைந்துகொள்பவர்களுக்கு எத்தகைய பயிற்சிகள் வழங்கப்படும்?

    19/05/2025 Duration: 19min

    நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில், காவல்துறை பணியில் ஒருவர் இணைந்துகொள்வது பற்றியும் Police Academy-இல் என்னென்னவெல்லாம் நடக்கும் என்பது பற்றியும், காவல்துறை அதிகாரிகள் மகேஷ் Ambrose, டினேஷ் Nettur மற்றும் ராஜேஷ் சாம்பமூர்த்தி ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • வேலையற்றோர் விகிதம் குறைகிறது - வட்டி விகிதம் குறையுமா?

    19/05/2025 Duration: 05min

    ஆஸ்திரேலியாவில் வேலையற்றோர் விகிதம் நிலையாக உள்ளதாகவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 89,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர் என்றும் இந்த எண்ணிக்கை கணிக்கப்பட்டதை விட மிகவும் வலுவான வேலைவாய்ப்பு வளர்ச்சி என்றும் கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    19/05/2025 Duration: 09min

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்த அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி தூதுக்குழு 22ம் தேதி முதல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது; டாஸ்மாக் முறைகேடு - தமிழகம் முழுவதும் அமலாக்கத்துறை சோதனை; உச்சகட்ட உட்கட்சி மோதலில் பாமக; பாஜக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்குமா? இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • உடல் உறுப்பு தானம் செய்வதும், அதற்காக பதிவு செய்வதும் ஏன் அவசியம்?

    19/05/2025 Duration: 12min

    நமது குடும்பத்தில் அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கு உடல் உறுப்பு தேவைப்படும்போது மட்டுமே உறுப்பு தானத்தின் அவசியம் பற்றி நமக்கு தெரியவரக்கூடும். பிற சமூகங்களோடு ஒப்பிட்டால் நமது சமூகத்தில் உடல் உறுப்பு தானம் செய்யா தங்களை பதிவு செய்கின்றவர்கள் மிகவும் குறைவு என்கின்றனர் மருத்துவர் ராமநாதன் லஷ்மணன் (HoD & Sr VMO Intensive Care unit – Campbelltown Hospital, ICU Senior Staff specialist – Fairfield Hospital ICU Senior Staff specialist - Liverpool Hospital, Executive Clinical Director – Fairfield Hospital Donation Medical Specialist SWSLHD, Course Director – Liverpool Hospital ARC ALS courses Conjoint Sr Lecturer – UNSW & WSU) மற்றும் செந்தில் ராமலிங்கம் (Member, Indian Advisory Committee – "We Care" Project) ஆகியோர். உடல் உறுப்பு தானம் குறித்து விளக்கும் அவர்கள், உடல் உறுப்பு தானம் தருவதற்கு ஒருவர் எப்படி தங்களை பதிவு செய்யவேண்டும் என்றும் விளக்குகின்றனர்.

page 19 from 43