Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
Are Australian workplaces safe for migrant women? - இந்நாட்டிற்குக் குடிவந்த பெண்களுக்கு, ஆஸ்திரேலியப் பணியிடங்கள் பாதுகாப்பானவையா?
06/12/2024 Duration: 08minNew research has highlighted the high rates of workplace sexual harassment and assault experienced by migrant women. Experts say there are many reasons why this type of abuse often goes unreported. - புலம்பெயர்ந்த பெண்கள் பணியிடங்களில் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்கள் மற்றவர்களுக்கு நடப்பவற்றுடன் ஒப்பிடுகையில் அதிக விகிதத்தில் இருப்பதாகப் புதிய ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இந்த வகையான நடவடிக்கைகள் புகாரளிக்கப்படாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
“அரசர்களாகவும், புலவர்களாகவும் இவர்கள் இருந்ததால் பல்நோக்கு சிந்தனை மேலோங்கி நிற்கிறது”
06/12/2024 Duration: 12minமுனைவர் சி. சிதம்பரம் அவர்கள் திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர். சங்க இலக்கியம், கோயிற்கலை, தமிழ்க்கணினி – இணையம், சமயம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இந்திய குடியரசுத்தலைவரின் ”செம்மொழித்தமிழ் இளம் அறிஞர்” விருது (2010-2011), தமிழக அரசின் இளம் தமிழ் ஆய்வாளர் விருது(2018) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த அவரை நமது SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் – றைசெல்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
06/12/2024 Duration: 08minஇலங்கையில் மாகாணசபை முறைமையை நீக்குவது தொடர்பில் ஜே.வி.பியின் கருத்து; நாட்டின் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்; இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களை அதிபர் சந்தித்து பேசியது உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
சர்வதேச மன்னிப்புச் சபையின் இனப்படுகொலை குற்றச்சாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் மறுத்தன
06/12/2024 Duration: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 06 டிசம்பர் 2024 வெள்ளிக்கிழமை
-
தென் கொரியாவில் என்ன நடக்கிறது?
05/12/2024 Duration: 07minதென் கொரியாவில் அதிபர் Yoon Suk Yeol நாட்டில் ராணுவச் சட்டத்தை பிரகடனம் செய்துவிட்டு பின்னர் அதை திரும்பப்பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் ஏன் அதிபர் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டார், அவரை பதவி நீக்கம் செய்ய ஏன் எதிர்கட்சிகள் உறுதியாக உள்ளன எனும் தென்கொரிய அரசியல் தகவலை செய்தியின் பின்னணி நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் றைசெல்.
-
மெல்பனில் 4 இடங்களில் வெள்ளை வானில் சிறுவர்களைக் கடத்த முயற்சி!
05/12/2024 Duration: 02minமெல்பனில் கடந்த 3 வாரங்களில் 4 சிறுவர் கடத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து காவல்துறையினர் பள்ளிகளைச் சுற்றி ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
“விடுதலைப் போராட்டம் பூப்பறிக்கும் வேலையல்ல” - ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை
05/12/2024 Duration: 14minகாலத்தை வென்று நிற்கும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள். தமிழீழ விடுதலை புலிகளின் கலை, பண்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக பணியாற்றியவர். அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற விடை தெரியாத நிலையில், கடந்த செவ்வாய்கிழமை (டிசம்பர் 3, 1948) அவர் தனது 75 ஆவது வயதை நிறைவு செய்தார். இந்த வேளையில் அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு 2006 ஆம் ஆண்டு வழங்கிய நேர்முகத்தை மீள் பதிவு செய்கிறோம். அவரோடு உரையாடியவர் றைசெல். நேர்முகம் – பாகம் 2.
-
நீரில் மூழ்கி இறக்கின்றவர்களில் ஏன் குடியேற்றவாசிகள் மிக அதிகம்?
05/12/2024 Duration: 05minநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் நீரில் மூழ்கி உயிர் இழக்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி நீரில் மூழ்கி உயிர் இழக்கின்றவர்களில் அதிகமானவர்கள் இளைஞர்களும், குடியேற்றவாசிகளும் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Tom Stayner. SBS – தமிழுக்காக தயாரித்தவர்: றைசெல்.
-
இலங்கையில் பெண்களுக்குப் பேருதவி வழங்கும் ஐயை குழு
05/12/2024 Duration: 11minஉலக அளவில் திறன்சார்ந்த பெண்கள் குழுமமாக இயங்கிவருகிறது ஐயை உலகத்தமிழ் மகளிர் மன்றம். அதன் இலங்கைக் கிளையின் ஒருங்கிணைப்பாளர் வலன்டீனா இளங்கோவன் அவர்களை தொலைபேசி வழியாக நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலியாவில் யார் எளிதாக குடியேற இனி விசா வழங்கப்படும்?
05/12/2024 Duration: 05minநாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் 456 தொழில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்படியான தொழில் பின்னணி கொண்ட திறமையானவர்களுக்கு அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு விரைவில் புலம்பெயர்ந்து வர அல்லது முன்னுரிமை அடிப்படையில் விரைவில் விசா வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. எந்த தொழில்பின்னணி கொண்டவர்களுக்கு அரசு முன்னுரிமை தரப்போகிறது என்பது குறித்த செய்தியின் பின்னணி. முன்வைப்பவர் றைசெல்.
-
“நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது, ஆனால் பலவீனமாக உள்ளது”
05/12/2024 Duration: 05minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 5 டிசம்பர் 2024 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
ஆஸ்திரேலியர்கள் எந்த brand-ஐ அதிகம் நம்புகின்றனர்? எதை நம்பவில்லை?
04/12/2024 Duration: 02minஆஸ்திரேலியர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்ட பெரிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Roy Morgan தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவில் எந்த மாநிலத்தவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்?
04/12/2024 Duration: 02minஆஸ்திரேலியாவில் மிகவும் மகிழ்ச்சியான குடியிருப்பாளர்கள் யார் என்பது தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட கிரேட் சதர்ன் வங்கி தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவில் தமிழில் உயரம் தொடும் 15 மாணவர்கள்!
04/12/2024 Duration: 16minஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை 12 ஆம் வகுப்பில் ஒரு பாடமாக எடுத்து, படித்து பட்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக NSW மாநிலத்தில் பாலர் மலர் தமிழ் கல்விக் கழகத்தினால் நடத்தப்படும் செவன் ஹில்ஸ் பாடசாலையில், இந்த ஆண்டு 15 மாணவ மாணவியர் HSC நிலையில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து கடந்த ஞாயிறு (1 டிசம்பர், 2024) பட்டம் பெற்றனர். அந்த மாணவ மாணவியரோடு நாம் நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பே இந்த நிகழ்ச்சி. தொகுத்தவர்: றைசெல்.
-
விஸ்வகர்மா திட்டம் & வங்கதேச சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்: செய்திகளின் பின்னணி என்ன?
04/12/2024 Duration: 07minவிஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு, வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் எனும் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
நாட்டில் வட்டி விகிதத்தைக் குறைப்பதை அல்லது கூட்டுவதை RBA எப்படி முடிவு செய்கிறது
04/12/2024 Duration: 07minவட்டி விகிதத்தை உயர்த்தலாமா, நிறுத்தி வைப்பதா அல்லது குறைக்கலாமா என்று ஒரு வருடத்தில் எட்டு முறை Reserve Bank உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள். அந்த முடிவு எவ்வாறு எடுக்கப் படுகிறது என்பதன் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
'பாலி நைன்' குழுவின் மீதமுள்ளோர் விரைவில் நாடு திரும்ப வாய்ப்பு
03/12/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/12/2024) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலிய அஞ்சல்தலை விலை உயர்கிறது!
03/12/2024 Duration: 02minஆஸ்திரேலியாவில் கடிதங்கள் மற்றும் முத்திரை விலைகள் அடுத்த ஆண்டு உயரும் என்று ஆஸ்திரேலியா போஸ்ட் அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியாவில் ஆஸ்திரேலிய பணத்தை போலியாக அச்சடித்த ஆஸ்திரேலியர் கைது!
03/12/2024 Duration: 02minஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மவுலிக் படேல் என்பவர், குஜராத்தில் ஆஸ்திரேலிய பணத்தாளை அச்சடித்து விற்பனை செய்ய முயற்சித்தபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக “இந்தியா டுடே” பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
03/12/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/12/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.