Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு: 30,000 பேருக்கு வேலை; மணிக்கு $61.50 சம்பளம்
12/08/2025 Duration: 02min2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கென ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நாட்டின் வட்டி வீதம் மீண்டும் குறைக்கப்பட்டது!
12/08/2025 Duration: 02minஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது வெறும் அடையாளம் மட்டுமே என்று சில ஆஸ்திரேலியர்கள் கவலை
12/08/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 12/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
Most Australians see migration as a benefit. Is economic stress changing the story? - பெரும்பாலும் ஆஸ்திரேலியர்கள் குடிவரவை வரவேற்கிறார்கள். பொருளாதார அழுத்தம் அதை மாற்றுமா?
11/08/2025 Duration: 07minMigrants and refugees are often blamed for rising cost of living pressures. Is there a way to break the cycle? - வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு புலம்பெயர்ந்தோரும் அகதிகளும் பெரும்பாலும் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வதந்தியை முறியடிக்க ஏதாவது வழி இருக்கிறதா?
-
Is Australian tap water safe to drink? - நாம் குடிக்கும் குழாய் நீர் பாதுகாப்பானதா?
11/08/2025 Duration: 10minAccess to safe drinking water is essential, and Australia’s often harsh environment means that our drinking water supplies are especially precious. With differences in the availability and quality of drinking water across the country, how do we know if it’s safe to drink? In this episode we get water experts to answer this question and more. - நமது குடிநீர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்யும் வகையில் சுத்திகரிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இருப்பினும், ஆஸ்திரேலியா முழுவதும் குடிநீரின் கிடைக்கும் தன்மை மற்றும் தரத்தில் வேறுபாடுகள் உள்ளன, அவை தண்ணீர் எங்கிருந்து பெறப்படுகிறது, சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் நீர் குழாய்களின் நிலை மற்றும் சுத்திகரிப்பு வசதிகளைப் பொறுத்து உள்ளன. இதுதொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கிறது ஆஸ்திரேலியா!
11/08/2025 Duration: 03minஆஸ்திரேலியா பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என பிரதமர் Anthony Albanese அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவில் விவாகரத்து குறைகிறது. ஏன்?
11/08/2025 Duration: 09minநம் நாட்டில் திருமணம் செய்து கொண்ட இருவரில் யார் மீதும் தவறு இல்லை என்றாலும், இருவரும் விரும்பினால் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து, தற்போது விவாகரத்துகள் மிகக் குறைந்த விகிதத்திற்குக் குறைந்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ரிசர்வ் வங்கி நாட்டின் வட்டி வீதத்தை நாளை குறைக்குமா?
11/08/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 11/08/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
மூத்த தலைமுறை இளைய தலைமுறைக்கு சொத்து தருவதை ஏன் நிபுணர்கள் விமர்சிக்கின்றனர்?
11/08/2025 Duration: 13minஆஸ்திரேலியாவில் மூத்த தலைமுறையிடம் செல்வம் குவிந்துகொண்டே செல்கிறது; இளைய தலைமுறை வீடு வாங்கவே தள்ளாடுகிறது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து கலந்துரையாடுகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
10/08/2025 Duration: 10minஇந்தியாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி எதிரொலி - எதிர்கொள்ள தயாராகிறதா இந்தியா?; தமிழகத்தில் பரப்பை ஏற்படுத்திய "சொசைட்டி பரிதாபங்கள்" என்னும் காணொளி - 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது புகார்; பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், பூம்புகாரில் நடைபெற்ற வன்னியர் மகளிர் மாநாடு; தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 - ஆதரவும் எதிர்ப்பும்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
இந்த வாரத்தின் ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் தொகுப்பு
09/08/2025 Duration: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (3 – 9 ஆகஸ்ட் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 9 ஆகஸ்ட் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
'பத்து ஆஸ்திரேலியர்களில் ஒருவர் இப்போது மில்லியனர்'
08/08/2025 Duration: 02minஅமெரிக்க டாலர் அடிப்படையில் பார்க்கும்போது 10 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் மில்லியனர்களாக மாறிவிட்டதாக சுவிஸ் வங்கியான UBS தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய பெண்களில் அதிகமானோருக்கு தலைவலி - ஆய்வு
08/08/2025 Duration: 02minஆஸ்திரேலிய பெண்களுக்கு Migraine என்ற தலைவலி எதிர்பார்த்ததைவிட அதிகமாக ஏற்படுவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
‘உலகில் சிக்கலில் மாட்டும் தமிழர்களுக்கு உதவுவதே எங்கள் முதல் பணி’
08/08/2025 Duration: 14minஉலகெங்கும் வாழும் தமிழ் மக்களை தமிழகத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் “அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை” யின் தலைவர் கார்த்திகேய சிவசேனபதி அவர்கள் சிட்னி நகர் வந்திருந்த வேளை, அவரை SBS கலையகத்தில் றைசெல் மற்றும் குலசேகரம் சஞ்சயன் நடத்திய நேர்காணலின் இரண்டாம் பாகம்.
-
‘காங்கேயம் மாடுகள் வழி அரசியலுக்கு வந்தேன்’
08/08/2025 Duration: 16minஉலகெங்கும் வாழும் தமிழ் மக்களை தமிழகத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் “அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை” யின் தலைவர் கார்த்திகேய சிவசேனபதி அவர்கள் சிட்னி நகர் வந்திருந்த வேளை, அவரை SBS கலையகத்தில் றைசெல் மற்றும் குலசேகரம் சஞ்சயன் நடத்திய நேர்காணலின் முதல் பாகம்.
-
Negative Gearingஇல் மாற்றம் கொண்டுவர அரசு இணங்குமா?
08/08/2025 Duration: 06minஉற்பத்தித்திறன் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, வரி முறைகளில் மாற்றத்திற்காக தொழிற்சங்கங்கள் எடுக்கும் முயற்சியில், நலன்புரி குழுக்களும் இணைகின்றன. அதில் ஒரு பகுதியாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் Negative Gearing படிப்படியாகக் குறைக்கப்படுவதை Australian Council of Social Services (ஆஸ்திரேலிய சமூக சேவைகள் கவுன்சில், ACOSS) விரும்புகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ரஷ்ய-யுக்ரேன் போரை அமெரிக்க அதிபர் நிறுத்துவாரா?
08/08/2025 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 08/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
07/08/2025 Duration: 08minஇலங்கை காவல்த்துறை மா அதிபர் நாடாளுமன்றத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்; யாழ்.செம்மணியில் தொடரும் அகழ்வுப் பணியில் மனித எச்சங்கள் தினசரியாக மீட்கப்பட்டு வருகின்றன. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
07/08/2025 Duration: 09minதொடரும் காசா பட்டினிச் சாவுகள்; காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்; இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்த அமெரிக்கா; தாய்லாந்து- கம்போடியா போர் நிறுத்தம்; ஆயுதங்களை கைவிடும் குர்து கிளிர்ச்சியாளர்கள்: மேற்பார்வையிட நாடாளுமன்ற குழுவை அமைத்துள்ள துருக்கி; சிரியாவில் குர்து படையினர் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.; வெளிநாட்டு கூலிப்படையினர் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் உள்நாட்டுப் போரை தூண்டுகிறது- சூடான்; கானா ஹெலிகாப்டர் விபத்து உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
NSW மாநிலத்தில் 14 வயது வெளிநாட்டு மாணவி குத்திக்கொலை!
07/08/2025 Duration: 02minNSW மாநிலத்தில் 14 வயது வெளிநாட்டு மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.