Tamil Quran Audio

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 41:53:11
  • More information

Informações:

Synopsis

Mishary Alfasy's Arabic Quran recitation with Tamil Translation - Verse by Verse Translation of the Quran.

Episodes

  • அத்தியாயம் : 31 - லுக்மான் - ஒரு நல்ல மனிதரின் பெயர்

    10/03/2018 Duration: 18min

    லுக்மான் என்ற நல்லடியார் தமது மகனுக்குக் கூறும் அறிவுரை 13வது வசனம் முதல் 19வது வசனம் வரை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.

  • அத்தியாயம் : 30 - அர்ரூம் – ரோமப் பேரரசு

    10/03/2018 Duration: 29min

    ரோமாபுரி சாம்ராஜ்யம் தோற்றது பற்றியும், பின்னர் அது மீண்டும் வெற்றி பெறும் என்பது பற்றியும் 2, 3, 4 வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு ரோமப்பேரரசு என்று பெயரிடப்பட்டுள்ளது.

  • அத்தியாயம் : 29 - அல் அன்கபூத் - சிலந்தி

    10/03/2018 Duration: 33min

    இந்த அத்தியாயத்தின் 41வது வசனத்தில் தவறான கடவுள் கொள்கை உடையவர்களுக்கு உதாரணமாக சிலந்தி வலை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

  • அத்தியாயம் : 28 - அல் கஸஸ் - நடந்த செய்திகள்

    10/03/2018 Duration: 49min

    இந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் 'அல் கஸஸ்' என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்தப் பெயர்.

  • அத்தியாயம் : 27 - அந்நம்ல் - எறும்பு

    10/03/2018 Duration: 42min

    இந்த அத்தியாயத்தின் 18, 19 வசனங்களில் எறும்பு பற்றிய ஒரு செய்தி இடம் பெற்றுள்ளதால் இப்பெயரிடப்பட்டது.

  • அத்தியாயம் : 26 - அஷ் ஷுஅரா - கவிஞர்கள்

    10/03/2018 Duration: 48min

    இந்த அத்தியாயத்தின் 221வது முதல் 227வது வசனம் வரை கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் அல்லர் எனவும், நல்ல கவிஞர்களும், கெட்ட கவிஞர்களும் உள்ளனர் என்றும் கூறப்படுவதால் கவிஞர்கள் என இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.

  • அத்தியாயம் : 25 - அல் ஃபுர்கான் - வேறுபடுத்திக் காட்டுவது

    10/03/2018 Duration: 30min

    திருக்குர்ஆனைப் பற்றி ஃபுர்கான் என்று இந்த அத்தியாயத்தின் முதல் வசனம் கூறுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.

  • அத்தியாயம் : 24 - அந்நூர் - அந்த ஒளி

    10/03/2018 Duration: 47min

    இந்த அத்தியாயத்தின் 35வது வசனத்தில் இறைவன் தனது நேர்வழிக்கு ஒளியை உதாரணமாகக் கூறுவதால் அந்நூர் (அந்த ஒளி) என்று பெயர் சூட்டப்பட்டது.

  • அத்தியாயம் : 23 - அல் முஃமினூன் - நம்பிக்கை கொண்டோர்

    10/03/2018 Duration: 38min

    இந்த அத்தியாயத்தின் 1 முதல் 11 வரை உள்ள வசனங்களில் வெற்றி பெறும் நம்பிக்கையாளர்கள் பற்றி கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

  • அத்தியாயம் : 22 - அல் ஹஜ் - கடமையான ஒரு வணக்கம்

    10/03/2018 Duration: 45min

    இந்த அத்தியாயத்தின் 27 முதல் 37 வரை உள்ள வசனங்களில் ஹஜ் பற்றியும், அதன் ஒழுங்குகள் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.

  • அத்தியாயம் : 21 - அல் அன்பியா - நபிமார்கள்

    10/03/2018 Duration: 42min

    மூஸா, ஹாரூன், இப்ராஹீம், லூத், இஸ்ஹாக், யாகூப், நூஹ், தாவூத், ஸுலைமான், அய்யூப், இஸ்மாயீல், இத்ரீஸ், துல்கிஃப்ல், யூனுஸ், ஸகரிய்யா ஆகிய நபிமார்கள் குறித்து பேசப்படுவதால் இந்த அத்தியாயம் நபிமார்கள் என்று பெயர் சூட்டப்பட்டது.

  • அத்தியாயம் : 20 - தா ஹா - அரபு மொழியின் 16 மற்றும் 26வது எழுத்துக்கள்.

    10/03/2018 Duration: 45min

    தா, ஹா எனும் இரண்டு எழுத்துக்கள் இந்த அத்தியாயத்தின் முதல் வசனமாக இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிட்டுள்ளனர்.

  • அத்தியாயம் : 19 - மர்யம் - ஈஸா நபியின் தாயாரின் பெயர்

    10/03/2018 Duration: 34min

    இந்த அத்தியாயத்தின் 16 முதல் 34 வரை உள்ள வசனங்களில் மர்யம் (அலை) அவர்கள் கணவரில்லாமல் கருவுற்று ஈஸா நபியை ஈன்றெடுத்த செய்தி கூறப்படுவதால் மர்யம் என்று இந்த அத்தியாயம் பெயர்பெற்றது.

  • அத்தியாயம் : 18 - அல் கஹ்ஃப் - அந்தக்குகை

    10/03/2018 Duration: 53min

    இந்த அத்தியாயத்தின் 9 முதல் 26 வரை உள்ள வசனங்களில் கொள்கைக்காக நாடு துறந்து குகையில் தஞ்சமடைந்த சில இளைஞர்களின் அற்புத வரலாறு கூறப்படுவதால் இந்தப் பெயர் வந்தது.

  • அத்தியாயம் : 17 - பனூ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள்

    10/03/2018 Duration: 53min

    இஸ்ரவேலர்களுக்கு இறைவன் அளித்த வெற்றிகளும், அவர்கள் இறைவனுக்கு மாறுசெய்ததும், அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளும் இந்த அத்தியாயத்தில் 4 முதல் 8 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இஸ்ராயீலின் மக்கள் என்று இந்த அத்தியாயம் பெயர் பெற்றது.

  • அத்தியாயம் : 16 - அன்னஹ்ல் - தேனீ

    10/03/2018 Duration: 01h05min

    இந்த அத்தியாயத்தின் 68, 69 வசனங்களில் தேனீயைப் பற்றியும், தேனைப் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு தேனீ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  • அத்தியாயம் : 15 - அல் ஹிஜ்ர் - ஓர் ஊர்

    10/03/2018 Duration: 24min

    ஹிஜ்ர் என்பது ஸமூது சமுதாயத்தினர் வாழ்ந்த ஊரின் பெயர். இந்தச் சமுதாயத்தினரைப் பற்றி இந்த அத்தியாயத்தின் 80 முதல் 84 வரை உள்ள வசனங்களில் குறிப்பிடப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  • அத்தியாயம் : 14 - இப்ராஹீம் - ஓர் இறைத் தூதரின் பெயர்

    10/03/2018 Duration: 31min

    இந்த அத்தியாயத்தில் இப்ராஹீம் நபியவர்கள் கஃஅபாவை புனர்நிர்மாணம் செய்தது 35வது வசனத்திலும், தமது குடும்பத்தினரை இறைவனின் கட்டளைப்படி பாலைவனப் பெருவெளியாக இருந்த மக்காவில் குடியமர்த்திய செய்தி 37வது வசனத்திலும், முதுமையில் அவர்களுக்கு இறைவன் இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய குழந்தைகளை வழங்கிய நிகழ்ச்சி 39வது வசனத்திலும் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இப்ராஹீம் எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

  • அத்தியாயம் : 13 - அர்ரஃது – இடி

    10/03/2018 Duration: 31min

    இந்த அத்தியாயத்தின் 13வது வசனத்தில் இடியும் இறைவனைத் துதிக்கிறது என்ற சொற்றொடர் இடம் பெறுவதால் இந்த அத்தியாயம் இடி என பெயர் பெற்றது.

  • அத்தியாயம் : 12 - யூஸுஃப் - ஓர் இறைத் தூதரின் பெயர்

    10/03/2018 Duration: 01h05min

    இந்த அத்தியாயம் முழுவதும் யூஸுஃப் என்ற இறைத்தூதரின் வரலாறு விரிவாகக் கூறப்படுகிறது. ஒரு அத்தியாயத்தில் முழுமையாக ஒருவரது வரலாறு கூறப்படுவது இந்த அத்தியாயத்தில் மட்டும் தான். எனவே இந்த அத்தியாயம் யூஸுஃப் எனப் பெயர்பெற்றது.

page 5 from 6