Sbs Tamil - Sbs

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • முடிவுக்கு வரும் 3G வலையமைப்புக்கள்! பல 4G பயன்பாட்டாளர்களும் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை!!

    19/03/2024 Duration: 02min

    ஆஸ்திரேலியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தமது 3G வலையமைப்புக்களை முடிவுக்கு கொண்டுவருவதால், 4G வலையமைப்பைப் பயன்படுத்தும் 740,000 வாடிக்கையாளர்களும் 000 இலக்கத்தை அழைக்க முடியாத நிலை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • சிறுவர்களின் ஆடைகளைக் களைந்து தேடுவது நிறுத்தப்பட வேண்டும்

    19/03/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலி பரப்பு வழங்கும் இன்றைய (செவ்வாய்க்கிழமை 19/03/2024) செய்திகள்.

  • Calls for better recognition of the international professional qualifications of migrants - புலம்பெயர்ந்தோரின் சர்வதேச தகுதிகள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக அங்கீகரிக்கப்படுகிறதா?

    19/03/2024 Duration: 08min

    Australia must better recognise the international qualifications of migrants to help address skills shortages, new research has found. The Committee for Economic Development of Australia report shows the nation needs to make more use of the skilled migrants in the country. In English : Peggy Giakoumelos ; In Tamil : Selvi - நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தோரின் திறன்கள் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் அங்கீகரிக்கப்படவேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் அறிக்கை கூறியுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் பணியிடங்களில் சிறப்பாக பங்களிக்க இது வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Peggy Giakoumelos எழுதிய விவரணத்தை தமிழிலில் தருகிறார் செல்வி.

  • Story of our nation – Part8: Australia after WWII - ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம்8: இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் ஆஸ்திரேலியா

    18/03/2024 Duration: 08min

    We are bringing the story of Australian political history in ten parts. In the eighth episode of this series, we explore the Australian political landscape after the end of the Second World War. - ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் எட்டாம் பாகத்தில், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர், ஆஸ்திரேலிய வரலாறு குறித்து நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • Story of our nation – Part7: Australia during WWII - ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம்7: இரண்டு உலகப் போரின்போது ஆஸ்திரேலியா

    18/03/2024 Duration: 08min

    We are bringing the story of Australian political history in ten parts. In the seventh episode of this series, we explore the Australian political landscape during the time of the Second World War. - ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் ஏழாம் பாகத்தில், இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் ஆஸ்திரேலிய வரலாறு குறித்து நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • Anjana Vasan: From Chennai to the Global Film Industry - சென்னைப் பெண் அஞ்சனாவின் திரைத்துறைப் பயணம்

    18/03/2024 Duration: 14min

    Anjana Vasan, a talented actress set to grace the screens as one of the lead in the feature film "Wicked Little Letters" in Australia, embodies a remarkable tale of cultural diversity and artistic pursuit. Born in the vibrant city of Chennai, Tamil Nadu, Anjana's formative years were enriched by the multicultural tapestry of Singapore, ultimately leading her to establish roots in England, where she currently resides. - விரைவில் ஆஸ்திரேலியாவில் வெளியாகவிருக்கும் Wicked little letters என்ற முழு நீளத் திரைப் படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருக்கும் அஞ்சனா வாசன் அவர்கள் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து, சிங்கப்பூரில் வளர்ந்து தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.

  • Consul General's Expert Insights on Aadhaar, OCI, PAN, Visas, and Business Ventures in India - ஆதார், OCI, PAN, இந்திய விசா, இந்தியாவில் வர்த்தகம் செய்தல் குறித்த இந்திய துணை தூதரின் பதில்!

    18/03/2024 Duration: 21min

    Join us for an insightful conversation with Dr. S Janakiraman, the recently appointed Consul General of the Indian Consulate in Sydney. In this exclusive interview conducted at the SBS studio by RaySel, Dr. Janakiraman addresses a myriad of questions pertinent to the Indian diaspora residing in Australia, as well as those seeking visas to visit India. Gain valuable insights and firsthand information from this engaging discussion with a distinguished diplomat. - சிட்னியில் இயங்கும் இந்திய துணை தூதரகத்தின் புதிய துணைத் தூதராக பதவேற்றிருக்கும் Dr S ஜானகிராமன் அவர்கள் நமது கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். இங்கு வாழும் இந்திய பின்னணி கொண்டவர்களும், இந்தியா செல்ல விசா தேவைப்படுகின்றவர்களும் கேட்க நினைக்கும் பல கேள்விகளுக்கு அவர் பதில் தருகிறார். SBS ஒலிப்பதிவு கூடத்தில் அவரை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.

  • இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

    18/03/2024 Duration: 08min

    இந்திய மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு - தமிழகத்துக்கு ஏப்ரல் 19ம் தேதி தேர்தல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மேலும் ஒரு வழக்குப் பதிவு, நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • Are you about to travel abroad? - வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளப் போகிறீர்களா?

    18/03/2024 Duration: 09min

    Overseas travellers have been urged to keep taking out travel insurance, as the rising cost of living affects their purchasing decisions. - அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் காரணம் காட்டி, பயணக் காப்பீடு பெறுவதை பல வெளிநாட்டுப் பயணிகள் தவிர்ப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று சுட்டிக் காட்டுகிறது.

  • குயின்ஸ்லாந்து இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பில் கவலைப்படவில்லை- அரசு

    18/03/2024 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 18/03/2024) செய்தி. வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    16/03/2024 Duration: 03min

    இந்த வார முக்கிய செய்திகள்: 16 மார்ச் 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • மெல்பன் பெண் ஸ்வேதா மரணம்: நடந்தது என்ன?!

    15/03/2024 Duration: 09min

    மெல்பன் Point Cook பகுதியைச் சேர்ந்த சைதன்யா "ஸ்வேதா" மதகனி என்ற பெண்ணின் சடலம் bin-குப்பை வாளிக்குள்ளிருந்து மீட்கப்பட்டிருந்தநிலையில் அவரது மரணம் தொடர்பான பிந்திய விவரங்களை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • கின்னஸ் சாதனை படைத்துள்ள ஆஸ்திரேலிய Blueberry!

    15/03/2024 Duration: 01min

    உலகின் அதிக எடையுள்ள Blueberry ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பண்ணையில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Decoding YouTube: Embracing Opportunities, Confronting Challenges - YouTube தளம் தரும் வாய்ப்புகளும், சவால்களும்!

    15/03/2024 Duration: 08min

    Social media has become an integral part of our world, enveloping us in its ubiquitous presence. A vast majority of individuals actively engage with various platforms, contributing to the dynamic landscape of online connectivity. However, the profound societal transformations and formidable challenges accompanying the exponential growth of YouTube are particularly noteworthy. L. Manoj Sitharthan, an esteemed journalist, and media educator, delves into a comprehensive explanation of these implications in the realm of social change and challenges. Produced by RaySel. - உலகில் பல சோசியல் மீடியா – சமூக ஊடகங்கள் நம்மை சுற்றியுள்ளன. நம்மில் பலர் அதனை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் யூடுப்கள் (YouTube) ஏற்படுத்தும் சமூக மாற்றங்களும், சவால்களும் மலைப்பை ஏற்படுத்துகின்றன. இது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் கல்லூரியில் ஊடகம் குறித்து கற்பிக்கும் ஊடகவியலாளர் L.மனோஜ் சித்தார்த்தன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • இலங்கையில் இந்த வாரம் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

    15/03/2024 Duration: 08min

    வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த செய்தியோடு பிற செய்திகளையும் இணைத்து “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • வீசா வழங்குவதில் ஏன் தாமதம்? அரசிடம் கேள்வி

    15/03/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 15/03/2024) செய்தி.

  • Aged Care Taskforce rejects tax levy and proposes funding based on personal wealth - முதியோர் பராமரிப்பிற்கென வரிச்செலுத்துவோரிடம் சிறிய வரிக்கட்டணம் வசூலிப்பது சரியா?

    14/03/2024 Duration: 09min

    A taskforce reviewing funding arrangements for aged care has rejected the idea of a levy to cover the sector's costs and instead suggested Australians accessing care should pay more based on their personal wealth. This feature explains more - முதியோர் பராமரிப்பு துறையினை விசாரணை செய்ய அமர்த்தப்பட்ட ராயல் கமிஷன் வழங்கிய பல பரிந்துரைகளைத் தொடர்ந்து முதியோர் பராமரிப்புக்கு சரியாக எவ்வாறு நிதியளிப்பது என்பதைக் கண்டறிய பெடரல் அரசு கடந்த ஆண்டு நிறுவிய பணிக்குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் யாவை மேலும் இது குறித்து சிலரின் கருத்துகளுடன் செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • 46 நாட்களுக்குப் பின்னர் அடிலெய்ட்டில் மழை!

    14/03/2024 Duration: 01min

    கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட அடிலெய்டில் 46 நாட்களுக்குப் பிறகு மழை பெய்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மகா சிவராத்திரி ஸ்பெஷல் “திருஆலங்காடு பேய்பாட்டு” உருவானது எப்படி?

    14/03/2024 Duration: 08min

    நாதமுனி காயத்ரி பரத் அவர்கள் “கனா கண்டேன்” நிகழ்ச்சி மூலம் நமது SBS- நேயர்களுக்கு நன்கு அறிமுகமானார். இவர் ஒரு கர்நாடக இசைக் கலைஞர்; மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற AWMA – Australian Women in Music விருதுகளில் இந்திய இசையின் பிரதிநிதியாக பணியாற்றியவர்; "யோகினி இன் மை மியூசிக்" என்ற நினைவுக் குறிப்பை எழுதியவர். அவரின் சமீபத்திய இசை வெளியீடு – மகா சிவராத்திரி ஸ்பெஷல் – “திருஆலங்காடு பேய்பாட்டு”. அது குறித்து காயத்ரி அவர்கள் விளக்கி பாடுகிறார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • தூக்கத்தில் சிக்கலா? மருத்துவர் சிவராமன் தரும் விளக்கம்

    14/03/2024 Duration: 06min

    உலகில் தூக்கம் குறித்த விழிப்புணர்வு தினம் (World Sleep Day) மார்ச் மாதம் 15 (வெள்ளிகிழமை) கடைபிடிக்கப்படுகிறது. தூக்கம் தொடர்பில் சிக்கல் இருப்பவர்கள் கட்டாயம் கேட்க வேண்டிய நிகழ்ச்சியை இது தொடர்பாக படைக்கிறோம். நல்ல தூக்கம் கிடைக்க என்ன செய்யலாம் அல்லது என்ன செய்யக் கூடாது என்று விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் வழங்கிய இந்நிகழ்ச்சி முதலில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஒலித்தது. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

page 21 from 25