Tamil Audio Books

இந்தியா முழுவதும் இதனால் நல்ல பலன் பெற முடியும்

Informações:

Synopsis

http://aurality.app - download free audio platform ராம்நாத் இப்போது அருகே இல்லாதது குறையாகப் பட்டது. அவர் போகுமுன் தனக்குக் கொடுத்து விட்டுப் போன தகவல் சாதாரணமானதல்ல. இந்தத் தகவலை அவர் எப்படியாவது உறுதிப்படுத்தவேண்டும். உறுதிப்படுத்தினால் முகம்மது அலி ஜின்னாவை சர்ச்சிலால் எளிதாக மடக்கி அடக்க முடியும். சர்ச்சில் ஒருவேளை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதம் செய்தால் சர்ச்சிலின் எதிரி லேபர் தலைவரும் துணைப் பிரதமருமான அட்லியை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தியா மேல் கருணை உள்ள அட்லி இதனைச் சரியாகப் பயன்படுத்துவார். விஷயம் சாதகமாக பிரிட்டிஷ் தேசம் பக்கம் இருக்கும் வரை டோரிஸ் உறுப்பினர்களும் அட்லிக்கு உதவுவார்கள். சர்ச்சிலுக்கும் இது ஒரு பாடமாக அமையட்டும். இங்கிலாந்து மட்டுமல்ல இந்தியா முழுவதும் இதனால் நல்ல பலன் பெற முடியும். முடிந்தால் ராஜாஜியை நாம் அழைத்துப் பேச வேண்டும். அவராலும் சில யோசனைகளைத் தரமுடியும். நல்ல காலம். யுத்த காலத்தில் சுதந்திரப் போராட்டம் செய்வதால் எந்தவிதப் பலனும் இல்லை என்று பகிரங்கமாகவும் நேர்மையாகவும் அறிவித்த ராஜாஜி அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது எத்தனை நல்லதாகப் போயிற்று... ராமநாதனி